பக்கம்:சிந்தனை வளம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 45

பலருக்கு உடம்பு முதுமையடைகிற அளவில் நாலில் ஒரு பங்குகூட மூளை முற்றுவதே இல்லை. இன்னும் சிலருக்கு வயது முதுமை எல்லாம் வருகின்றன; ஆல்ை உடம்பிலோ மனத்திலோ வளர்ச்சியே வருவதில்லை, இவை எல்லாம் எப்படி நோய்களோ அப்படியே பண்பாடு வளராமல் தேங்கி விடுவதும் ஒரு நோயே.

சென்னை நகரின் பிரதானமான சாலை ஒன்றில் காலை பத்து மணிக்குத் திடீரென்று அத்தனை ஆட்டோ ரிக்ஷாக் களையும். டாக்ஸிகளையும் குறுக்கே நிறுத்திப் போக்கு வரத்தைத் தடுத்து விடுகிருர்கள் எல்லாமும் எல்லாரும் அப்படியே ஸ்தம்பித்துப் போகிருர்கள்.

போலீஸுக்கும் ஒர் ஆட்டோ டிரைவருக்கும் தகராறு, போவீளை எதிர்த்து ஆட்டோ-டாக்ஸி டிரைவர்களின் நடவடிக்கை இது.

அந்தச் சாலையைக் கடந்து பிரசவ ஆஸ்பத்திரிக்குப் போவதற்காகக் காரில் ஒரு நிறைமாத வயிற்றுப் பிள்ளைக்

காரி காத்திருக்கிருள்.

அவளுக்கு நடுத் தெருவிலேயே குழந்தை பிறக்கிறது. டாக்டர் இல்லாமல், உதவிகள் இல்லாமல் நடுத்தெருவில் செத்துப் பிழைக்கிருள் அவள். ஒரு தாயை இப்படி நட்ட நடுத் தெருவில் தவிக்க விடுவதுபோலப் பண்பாட்டுக் குறைவுவேறென்ன இருக்க முடியும்?

இன்னொருவர் அயல்நாட்டுப் பிரயாணி. அவரும் காரில் அந்தச் சாலையைக் கடந்து விமான நிலையத்துக்குப் போக வேண்டும். -

இந்த நடுத் தெரு மறியல் ஒரு மணி நேரம் நீடித்தால் அவருடைய பிரயாணம் தட்டிப் போய் விடும்.

ஒரு போலீஸ்காரர் தன்னைச் சிரமப்படுத்தியதற்காக .ஊரை எல்லாம் சிரமப் படுத்தியே தீர வேண்டும் என்பது ஆட்டோ ரிக்ஷா ஒட்டுபவரின் பண்பாடாக இருக்க வேண்டு மால்ை அந்த நாடு எப்படி உருப்படும்? தவறு போலீஸ்கார :ருடையதாக இருந்தாலும், ஆட்டோ டிரைவருடையதாக இருந்தாலும் அதை முறைப்படி தீர்த்துக் கொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/47&oldid=562289" இலிருந்து மீள்விக்கப்பட்டது