பக்கம்:சிந்தனை வளம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நா. பார்த்தசாரதி

முடியும். அதை விட்டுவிட்டு, நான் ஒரு நிமிஷம் கஷ்டப் பட்டேன். ஊரெல்லாம் ஒரு மணி நேரம் கஷ்டப்படட்டுமே, என்ற பாணியில் செயல்படுவது பண்பாட்டுக் குறைவானது மட்டுமில்லை, அநாகரிகமானதும் ஆகும். -

இதே போல் ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு பிரிட்டிஷ் பிரஜை அல்லது தொழிலாளி எப்படி நடந்து கொள்கிருன் என்பதைத் தெரிந்து கொண்டால் பண்பாடு என்பது என்ன வென்ருவது புரியும்.

1976 மார்ச், ஏப்ரல் மாதங்களில், நான் லண்டனில் இருந்து போது, தேம்ஸ் நதியில் படகு விடுகிறவர்கள் இரண்டு நாள் படகுகளை ஒட்டாமல் நிறுத்தினர்கள். வேலை நிறுத்தமில்லை, அவர்கள் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு தொழிற்சங்க மாநாட்டுக்குப் போவதற்காகத்தான்.

ஆனால், அந்தப் படகு விடும் தொழிலாளர்களுக்குத் தான் எத்தனை பண்பாடு! இரண்டு நாள் வேலை. செய்யாமல் விடுவதால் பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் தங்களைத் தவருகப் புரிந்து கொண்டு விடுவார்களோ என்று அஞ்சி, பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கருணை கூர்ந்து எங்களை மன்னிக்க வேண்டும். இரண்டு தினங்கள் அவர்களுக்கு நாங்கள் பயன்பட முடியாமல் இருப்பதற்காக வருந்துகிருேம்; நாளன்றைக்குக் காலையில் மீண்டும் எங்கள் சேவையைத் தொடர்வோம். என்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்துக் கொள்கிருேம்’ என்னும் பொருள்பட எளிய ஆங்கிலத்தில் மூலைக்கு மூலை அறிவிப்புக்களை எழுதி வைத்திருந்தார்கள். இதில் உள்ள பண்பாடு என்னை வியக்க வைத்தது.

"நாளே டாக்சி ஒடாது! நாளை ஆட்டே ஓடாது! நாளே ரயில் ஓடாது! நாளை பஸ் ஓடாது’-என்கிறபாணியில் பொது மக்களையும் அந்நிய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளாக வந்திருக்கும் விருந்தினர்களையும் மிரட்டுகிருற். போலவே அறிவிப்பு வெளியிடுகிற நமது பண்பாட்டுப் பஞ்சத்தை என்னவென்று வர்ணிப்பது? ஒரு சிறு உபசார மின் னிப்புக்கூட இந்த மிரட்டலில் இல்லையே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/48&oldid=562290" இலிருந்து மீள்விக்கப்பட்டது