பக்கம்:சிந்தனை வளம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 47°

கலகம், புரட்சி, போராட்டம் ஆகியவற்றில் ஈடுபட். டால்கூடப் பிரிட்டிஷ்காரர்களுக்கு அவற்றையும் பண்பட்ட விதத்தில் நடத்தத்தெரியும். நாகரிகமாக இயக்குவதற்குத் தெரியும். -

வடக்கு அயர்லாந்து, பிரிட்டனிலிருந்து பிரிந்து தனி நாடாக வேண்டும் என்று போராடுகிற புரட்சியாளர்களுக்கு ஐ. ஆர். ஏ. என்று பெயர், அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக லண்டனில் டாக்ளிகளில் வெடி குண்டு (டைம் பாம்) வைத்தல், ரயில்களில் வெடி குண்டுவைத்தல் போன்ற தீவிர நடவடிக்கைகளில் இறங்கு வதுண்டு. இந்தத் தீவிர நடவடிக்கைகளுக்கு இடையிலும் பொது மக்களை அநாவசியமாக விரோதித்துக் கொள்ளக் கூடாது என்கிற பண்பை அவர்கள் ஒரு சீராகக் கடைப் பிடிப்பதைக் கண்டேன், -

ஒரு நாள் இரவு, சவுத் லண்டன் டெக்னிகல் கல்லூரி அருகே மேனர் அவென்யூவில் உள்ள ஒரு தமிழ் நண்பரின் வீட்டுக்குச் சாப்பிடச் செல்வதற்காக ட்யூப் ரெயிலில் (பாதாள ரயில்) பெல் சைஸ் பார்க்க ஸ்டேஷனில் ஏறி, லிவர்பூல்ஸ்டிரீட் ஸ்டேஷன் வரை சென்று ரயில் நிறுத்தப் பட்டு, எல்லாரையும் அவசர அவசரமகப் போலீஸார் வந்து கீழே இறங்கச் சொன்னர்கள். காரணம் கேட்ட போது, ரயிலில் ஐ. ஆர். ஏ. டைம் பாம் இருப்பதாகப் போலீஸுக்குத் தகவல் வந்திருப்பதாகவும், பிரயாணிகளை அபாயத்திவிருந்து மீட்கத்தான் இந்த அவசரம் என்றும் தெரிவித்தார்கள். -

அது மட்டுமில்லை, அருகிலிருந்த பங்களா தேவுைச் சேர்ந்த அம்மையார் என்னிடம் கூறினர் :

"நான் மூன்று வருடங்களாக லண்டனில் இருக்கிறேன்! இந்த ஐ. ஆர். ஏ. காரர்களிடம் ஒரு நல்ல பண்பாடு உண்டு. ரயிலிலோ, பஸ்ஸிலோ, டாக்ளியிலோ டைம் பாம் வைத்தாலும் மிக அருகிலிருக்கும் ஒரு போலீஸ் ஸ்டேஷ. னுக்கு அவர்களே டெலிஃபோன் செய்து, நாங்கள் இது. போல வைத்திருக்கிருேம். பொது மக்களின் நன்மைக்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/49&oldid=562291" இலிருந்து மீள்விக்கப்பட்டது