பக்கம்:சிந்தனை வளம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 நா. பார்த்தசாரதி

ஆடிட் செக்ஷனில் போய் விசாரித்தால், மறுபடி ஹெட் கிளார்க்கிடம் பந்தாடுவார்கள்., பார்க்கிற யாரிடமிருந்தும் பொறுப்போடு கூடிய பதிலேப் பெறவே முடியாது.

மத்திய, மாநில அரசாங்க அலுவலகங்களில் இது சர்வ சகஜமான நிகழ்ச்சி. பொறுப்பு என்பது சுமைதான், கனம் தான். பொறுப்பில்லாத நிலை என்பது சுகமாகவும், உல்லாச மாகவும் இருக்கலாம்.

ஆனல், எல்லாருமே சுமையைக் கீழே இறக்கி வைத்து விட்டு நிற்க ஆசைப்படுகிற தேசத்தில் அந்தத் தேசத்திற்கே தேவையானவற்றை வேறு உலகிலிருந்து தேவதூதர்களா வந்து எடுத்துச் சுமந்து கொண்டு போவார்கள்?

படித்தவர்களே பொறுப்பற்று இருக்க விரும்பினுல் கதி மோட்சமே இல்லை. உ. பி. யில் பதவிக் காலம் முடிந்து போன பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், பழைய-காலா வதியான ரயில்வே பாஸைக்காட்டி மிரட்டியே நீண்ட காலம் முதல் வகுப்பில் ஒசிப்பயனணம் செய்து வந்தாராம். அரசன் எவ்வழி அவ்வழி மக்கள். பொறுப்பின்மை என்பது மேலிருந்து கீழ் நோக்கிப்ப்ாய்கிற வியாதி.

சமூகப் பொறுப்பில்லாத தலைவர்கள் நிறைந்த தேசத்தில் சமூகப் பொறுப்புள்ள மக்களை உருவாக்க முடிவது சிரம சாத்தியமான காரியம். விதை ஒன்று போடச் சுரை ஒன்று முளேக்காது. ★

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/56&oldid=562298" இலிருந்து மீள்விக்கப்பட்டது