பக்கம்:சிந்தனை வளம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. அபத்தமான மொழி பெயர்ப்புக்கள்

கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாகத் தமிழ் மொழியில் சில இடங்கள், சில பொருள்கள், சில அலுவல கங்களைப் பொறுத்த பெயர்களே, தீவிரமாக மொழிபெயர்க் கும் முயற்சி ஆரம்பமாகி நடை பெற்றுவருகிறது. இந்த முயற்சியில் நல்ல மொழி பெயர்ப்புக்களை விட அபத்தமான மொழி பெயர்ப்புக்களே அதிகமாகக் கிடைத்திருக்கின்றன. பாமர மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்த மொழி பெயர்ப்புக்களேவிட, அவர்களே மேலும் குழப்பமடையச் செய்யும் மொழிபெயர்ப்புக்களே பெரும்பாலும் செய்யப் :பட்டுள்ளன. மொழி பெயர்ப்பைவிட மூலமே நன்கு புரிகிறது என்ற நிலை உண்டாகிறது.

ஒரே ஒரு தனி வார்த்தையாக லாரி (lorrw) என்று இருப்பதைத் தனித் தமிழிலோ, தூய தமிழிலோ சொல்ல வேண்டுமென்ற முனைப்பில் சரக்கு + உந்து சரக்குந்து, பண்ட உந்து என்றெல்லாம் மொழிபெயர்க்கிரு.ர்கள். பிற மொழி வார்த்தையை நம் மொழியிலுள்ள மற்ருெரு வார்த் தைக்குப் பெயர்ப்பதைவிட, அந்த அர்த்தத்தைத் தரும் விதத்தில் இரண்டு மூன்று வார்த்தைகளாகப் பெயர்க்கி ருேம். அந்த மொழிபெயர்ப்பிலும் ஒரே மொழிபெயர்ப் பைக் கொண்டு திருப்தி அடைவதில்லை. சரக்குந்து என் பதில், சரக்கு’ என்ற சொல் தமிழா இல்லையா என்ற சந்தேகம் வந்தவுடன் பண்ட உந்து' என்று மற்ருெரு மொழிபெயர்ப்பை உண்டாக்குகிருர் ஒருவர். எல்லாம் தமிழிலேயே இருக்க வேண்டும், வெளியிலிருந்து எதுவும் வரக்கூடாதுஎன்ற எண்ணத்தில் இந்தமொழிபெயர்ப்புக்கள் செய்யப்படுகின்றன. இப்படி வெளிக் காற்றே ஆகாது என்று நம் வீட்டு ஜன்னலையும், கதவுகளையும் இறுக்கி மூடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/57&oldid=562299" இலிருந்து மீள்விக்கப்பட்டது