பக்கம்:சிந்தனை வளம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 நா. பார்த்தசாரதி

அடைத்துக் கொண்டு மூச்சுத் திணற வேண்டியது அவசியம் தாளு என்பதைச் சிந்திக்க வேண்டும்.

தான் துாய்மையாகவும், வேறு எதுவும் தன்னில் வந்து கலந்து சேர்ந்து விடாமலும் இருக்க வேண்டுமென்று சமுத் திரம் ஆசைப்பட்டு, நதிகள் எல்லாம் தன்னில் சங்கமமாவ: தைத் தடுத்தால் என்ன ஆகும்? சமுத்திரமே இராது.ஆனல் நதிகளின் கலப்பால் சமுத்திரம் வளப்படவே செய்யும்.

'கண்ட கண்ட ஆட்கள் கண்டகண்ட பணத்தைக் கொண்டு வந்து போடுகிரு.ர்கள். எவன் பணமும் வந்து கலந்து நம் தனித் தன்மையைக் கெடுத்துவிடக் கூடாது.” என்று ஒரு பாங்க் நினைத்தால் என்ன ஆகும்? சீக்கிரமே திவாலாகி விடும்.

உலகின் எல்லாப் பெரிய மொழிகளும் சமுத்திரம் போன்றவை, ஒரு பெரிய சமுத்திரத்தில் வந்து கலக்கின்ற. வரையில்தான் நதிகளுக்குத் தனித்தனியே பெயர்களும், துறைகளும், கரைகளும் உண்டு. சமுத்திரத்தில் வந்து கலந்த பின் அவை சொந்தப் பெயர்களையும், கரைகளையும், துறைகளையும் இழந்து சமுத்திரம் என்ற பொதுப் பெயரை அடைவது தவிர்க்க முடியாதது. இதேபோல் பெரிய மொழி ஒன்றில், தவிர்க்க முடியாதபடி எந்தத் திசையிலிருந்து எப்படிப்பட்ட வார்த்தைகள் வந்து கலந்தாலும், அவை, வந்து கலக்கிற மொழிக்குச் சொந்தமாகி வளத்தைக் கொடுக்கின்றன, என்றே கொள்ள வேண்டும்.

எங்கேயிருந்து யாரிடமிருந்து டெபாஸிட் செய்யப் பட்டாலும் பாங்கில் 'டெபாலிட்” செய்யப்பட்டு, அங்கே இருக்கிற வரை பணம் அதன் சொத்தாகவே கருதப் பட்டுப் பாதுகாக்கப்படும். மொ ழி யி ல் டெபாலிட் செய்யப்படும் சொற்களுக்கும் இது பொருந்தும். தவிர்க்க முடியாதபடி ஒரு மொழியிலிருந்து இன் ளுெரு மொழியில் வந்து கலக்கும் சொற்களும் இப்படிப் பட்ட்வையே. ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரியிலும், சேம்பர்ஸ் டிக்ஷனரியிலும் ஒவ்வொரு புதுப் பதிப்பின்போதும் பல நூறு அதிக வார்த்தைகள் சேர்ந்து விடுகின்றன. அப்படிச் சேரும் வ்ார்த்தைகள் அந்த மொழியை வளப்படுத்துகின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/58&oldid=562300" இலிருந்து மீள்விக்கப்பட்டது