பக்கம்:சிந்தனை வளம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

お& நா. பார்த்தசாரதி

ரேடியோ பெட்டி’ என்றும், ஃபிரிஜிடேரை 'ஐஸ் பெட்டி’ என்றும் ப்ளம்’ என்பதைச் சீமை இலந்தப்பழம்' என்றும் கெரோலின் என்பதைச் சீமைஎண்ணெய்’ என்றும், "பம்ப் செட்” என்பதை இறவை மெஷின்’ என்றும், டிராக்டரில் கட்டி உழுவதை உழவு மிஷினில் உழுவது” என்றும் பாமரர்கள் சகஜமாக மொழி பெயர்த்துச் சொல்லி விடுவார்கள். அவர்கள் மொழி பெயர்ப்பில் செயற்கையோ, குழப்பமோ, புரியாத் தன்மையோ இருக். காது. செயற்கை, புரியாத்தன்மை குழப்பம் இவை எல்லாமும் இவற்றை விடவும் அதிகமான அபத்தங்களும், படித்தவர்களின் மொழி பெயர்ப்புக்கே உரிமையானவை. இந்த விஷயத்தில் கல்லாத பேர்களே நல்லவர்கள்’ என்பது என் கருத்து. மொழி பெயர்க்கப்படும் மொழியில் (Rceptive Language) சரியான ஒரு பதங்ரிகள் கிடைக்காத பட்சத்தில் மூலமொழி (Donor Language)யின் புரிந்த பதங்களை அப்படியே பயன்படுத்துவதில் தவறில்லை என்ற மனப்பான்மையே சிறந்தது. லாரி, பஸ், டெலிபோன், டெலிவிஷன் ஆகிய சொற்களுக்கும், அவற்றைப் போன்ற பிற சொற்களுக்கும் இது பொருந்தும். அபத்தமான, யாருக்கும் புரியாத, குழப்பக்கூடிய ஒரு மொழி பெயர்ப்பை விட சுமாரான, எல்லோருக்கும் புரிந்த, யாரையும் குழப் பாத பிறமொழிச் சொல்லே தேவலாம் என்று நினைக்கத். தோன்றுகிறது. - Trunk Call-முண்டக் கூவல்; காபி-குளம்பி,கொட்டை வடி நீர்; Tea Stall-சூடான சுவை நீரங்காடி: Jeep. வல்லுந்து; பொது நோக்கு உந்து (ஜெனரல் பர்ப்பஸ் வெகிக்கிள்), பஸ்-பேருந்து; ப்ளஷர்-இன்ப உந்து ஆகியபல மொழி பெயர்ப்புக்களைப் பாருங்கள். கார்’ என்பதே எவ்வளவு சகஜமாகப் புரிகிறது என்று நினைத்துப் பார்த். தால்தான், என் வாதத்திலுள்ள நியாயம் புரியும்.

மொழி பெயர்க்கப்பட்டு உருவான தமிழ் மொழிக் குறியீடுகளைவிட, மூலமாக இருக்கும் பழைய பிற மொழிச் சொல்லே நமக்கு நன்ருகப் புரிகிறது. டாக்ஸி-வாடகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/60&oldid=562302" இலிருந்து மீள்விக்கப்பட்டது