பக்கம்:சிந்தனை வளம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 6 f

டிருக்கிருர்கள்’ என்று பரிகசிக்க இடம் தருகிறது ஏர்ப்ரேக்’கின் அழகான மொழிபெயர்ப்பு. டெலிவிஷனை " வானெளி’ என்கிருர் ஒரு மொழி பெயர்ப்பாளர். மின்னல் நட்சத்திரம், சூரியன், சந்திரன் அனைத்துமே வானொளி தான். இதில் எதையும் குறிக்கலாம் அது. டெலிவிஷனே எல்லாருக்கும் புரியும்போது, அதைவிடப் புரியாத மொழி பெயர்ப்புக்களை அல்லது, குழப்பமான மொழி பெயர்ப்புக் .களை வைத்துக் கொண்டு கழுத்தறுப்பது எதற்காக என்பது தான் என் கேள்வி. உங்களில் பலரது கேள்வியாகவும் அது இருக்கலாம். -

'இப்படியே போனல் தமிழில் தமிழ் இருக்காது-மொழி பெயர்ப்புக்கள் மட்டும்தான் மீதமிருக்கும்’ என்று ஒரு நண்பர் அடிக்கடி குறைப்பட்டு வருந்துவார். அது நியாய மான வருத்தமே. அபத்தமான மொழி பெயர்ப்புக்களை விட, சுமாரான புரிகிற வேற்று மொழிப் பதங்களே போதும் என்று ஏற்றுக் கொள்வதில் பாவமோ, வெட்

கமோ இல்லை.

பஸ், லாரி, பிரேக் டெலிபோன் எல்லாம் எல்லா டிருக்கும் புரிகிற சொற்கள் என்பதேைலயே புறக்கணிக்கப் படவேண்டுமா என்ன? விஞ்ஞானப் புதுமைகள் எவற்றை யும் கண்டு பிடிக்கத் துப்பு இல்லாமல் அவற்றுக்கான மட்ட மான மொழி பெயர்ப்புக்களை மட்டும்கண்டு பிடித்து அதை மக்கள் தலையில் கட்டுவதிலேயே இன்னும் எவ்வளவு காலத்தை வீணுக்கப் போகிருர்களோ? 责

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/63&oldid=562305" இலிருந்து மீள்விக்கப்பட்டது