பக்கம்:சிந்தனை வளம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. தேசபக்தி என்பதுதான் என்ன?

எது எது எல்லாம் தேசபக்தி என்று கூறுவதைவிட எதுஎது எல்லாம் தேசபக்தி இல்லை என்று கூறி விடுவது: இப்போது மிகவும் சுலபமாயிருக்கும்போல் தோன்றுகிறது. கதர் கட்டுவது, மகாத்மா காந்திஜிக்கு ஜே என்பது, சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழங்குவது-இவை: எல்லாம் தேசபக்தியின் அடையாளங்கள் என்று, நாற்பது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னல் இந்நாட்டில் இவ்வார்த். தைகளுக்குச் சுலபமாக வியாக்கியானம் கிடைத்தது.

நல்லவனுக இருப்பது என்ருல் என்ன?-என்கிற கேள் விக்கு, எப்படி ஒரு வாக்கியத்தில், ஒர் எல்லையில் ஒரு. கோட்டைப் போட்டு அர்த்தத்தைச் சொல்லி முடிக்க இய: லாதோ அப்படியே தேச பக்தனுக இருப்பது எப்படி?’என்கிற கேள்விக்கும் ஒரு வாக்கியத்தில் பதில் சொல்லிவிட முடியாது. ஓர் குறுகிய எல்லைக்குள்ளேயும் பதில் சொல்லி விட முடியாது.

சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் பிரிட்டீஷ்காரரை எதிர்ப்பதற்கும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற். கும் இந்நாட்டுத் தேசபச்தியில் இடமிருந்தது. இன்று சுதந், திரம் பெற்று முப்பது ஆண்டுகள் கழிந்தபின் அது பொருத்த மற்றதாகவும் அவசியமற்றதாகவும் ஆகிவிட்டது.

ஒரு பொது நல்ல குணத்தை, அல்லது பண்பை ஒரு குறிப்பிட்ட இயக்கத்தோடும், அதன் மனிதர்களோடும். சேர்த்துப் பார்ப்பதாலோ, ஒரு குறிப்பிட்ட காலத்தோடு சேர்த்துப்பார்ப்பதாலோ பிற்காலத்தில் சில அபாயங்கள் ஏற்படும். தேசபக்தி என்ற வார்த்தையும் இந்நாட்டில் இப்படி ஒர் அபாயத்துக்கு ஆளாகியிருக்கிறது. சரியாகவோ, தவருகவோ தேசபக்தி, தேசபக்தர் என்ற வார்த்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/64&oldid=562306" இலிருந்து மீள்விக்கப்பட்டது