பக்கம்:சிந்தனை வளம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*64 நா. பார்த்தசாரதி

விடுகிற ஒரு காங்கிரஸ்காரனைவிட, மேலே சொன்ன எல்லாவற்றையும் அதைவிட அதிகமாகவும் தேசநலனுக்கு கந்தவற்றைச் செய்கிற எந்தக் கட்சியையும்சார்ந்த அல்லது சாராத-கதர் கட்டாத-ஒரு பாமரனை, முதல் தரமான தேசபக்தனுக நான் ஏற்றுக் கொள்வேன். ஒரு மணமகன் தன் திருமண நாளின் புனிதத்தன்மை குறித்தும் சடங்கு சம்பிரதாயத்துக்காகவும் கோடி வேஷ்டியை மஞ்சளில் நனைத்துக் கட்டிக் கொள்கிருன் என்பதற்காக வாழ்நாள் முழுவதுமே புனிதத் தன்மையைக் காப்பதத்காக மஞ்சள் கோடி வேஷ்டியைக் கட்டிக் கொண்டு திரிய வேண்டுமென்ற அவசியம் உண்டா?

கதரும் அப்படித்தான். அந்நியத் துணிகளின் ஆதிக்கம் இருந்தபோது அந்தச் சுதேசித் துணி புனிதமாகவும் தேச பக்தியின் அடையாளமாகவும் இருந்தது. எழுபத்தைந்து சதவிகிதம் உள்நாட்டில் தயாராகும் துணிகள் கிடைக்கிற இந்நாளில் அது ஒரு பழைய புனித ஞாபகமாக மட்டுமே

நிற்க முடியும். M

நாடு நன்ருக இருக்கவேண்டும், நாட்டு மக்கள் நன்முக இருக்கவேண்டும், அதற்கும், அவர்களுக்கும் சாதகமான அனைத்தையும் சொல், செயல், சிந்தனைகளால் செய்வேன் என்றும்-பாதகமான எதையும் சொல், செயல், சிந்தனை களால் செய்யமாட்டேன் என்றும் உறுதியாயிருப்பவன் எவயிைருந்தாலும் அவனே தேசபக்தியுள்ளவன். அவன் எந்தக் கட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவனு டைய தேசபக்தி என்பது தேசத்தின்மேல் உள்ள அக் கறையே ஒழிய ஒரு கட்சியின் மேலுள்ள நாட்டம் மட்டும்

இல்லை. அப்படி நினைப்பது வெறும் அறியாமையே. - பிரயோஜனமில்லாத, உப்புச் சப்பில்லாத அயல்

நாட்டுப் பயணங்களைச் செய்யும் அமைச்சரைவிடச் சிக்கன மாகப் பெட்ரோல் செலவழிக்கும் ஒரு கார் சொந்தக்காரன் பெரிய தேசபக்தன் என்பது என் அபிப்பிராயம்.

நாட்டின் நலனைத் தன் நலகை நினைத்து உண்மையோடு பாடுபடுகிறவர்கள், நாட்டின் கஷ்ட நஷ்டங்களாக நினைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/66&oldid=562308" இலிருந்து மீள்விக்கப்பட்டது