பக்கம்:சிந்தனை வளம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம்

1. சமூகப் பொறுப்புக்களும் சராசரி இந்தியனும்

இந்திய மக்களில் பலருடைய சமூகப் பொறுப்புக்களைப் பற்றி ஆராயும்போது சில விநோதமான முரண்பாடுகள் புலப்படுகின்றன. "சோஷல் ரெஸ்பான்ஸிபிளிட்டீஸ்” எனப்படும் சமூகப் பொறுப்புக்கள். அவரவர் சுயநலத்துக் கேற்ப வேறுபடுகின்றன. சுயநலத்துக்கு நம் நாட்டில் எத்தனையோ கெளரவமான பெயர்கள் கொடுக்கப்பட்டிருக் கின்றன. -

ஒரு நாள் காலையில் பால் டெப்போவில், வழக்கமாகப் பால் கிடைக்கும் நேரத்துக்குக் கிடைக்கலில்லை. நானும் காத்திருக்கிறேன். என்னேடு ஏதோ ஒரு 'பாங்க் அலுவலர் ஒருவரும் காத்திருக்கிருர். மணி எட்டு, ஒன்பது, பத்து என்று ஆகியும் பால் வரவில்லை. நான் வாய் திறப்பதற்கு முன்பே, பாங்க்' அலுவலர் எரிச்சலோடு வாய் திறந்து தெருவில் கூப்பாடு போடுகிரு.ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/7&oldid=562249" இலிருந்து மீள்விக்கப்பட்டது