பக்கம்:சிந்தனை வளம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. காட்சிக்கு எளிமை

ஓர் அரசியல்வாதி காட்சிக்கு எளியவகை இருக்க வேண் டும். அதாவது, மக்கள் சிரமப்படாமல் கண்டு பேசித். தங்கள் குறைகளைக் கூற முடிந்தவனாக இருக்க வேண்டும். என்று, மன்னராட்சிக் காலத்து அரசியல் பற்றி எழுதிய போது திருவள்ளுவர் கூறுயிருக்கிரு.ர்.

ஜனநாயகம், தேர்தல் ஆகிய புதிய முறைகள் அடங்கிய இந்தக் காலத்துக்கு இது இன்னும் அதிகம் பொருந்தும். இது மக்களாட்சிக் காலமாயிற்றே!

காண்பதற்குச் சுலபமானவளுகவும் கடுஞ்சொற்களைப் பேசாதவனுகவும் உள்ள அரசியல் தலைவனின் செல்வாக்கே. வளரும்’ என்பது திருவள்ளுவர் கருத்து.

இன்றைய அரசியல் தலைவர்களில் பலரைக் காண்பதே. பகுதிரைக் கொம்பாக இருக்கிறது. தேர்தல்களின்போது ஒட்டுச் சேகரிக்க வருகிற சமயத்தில் மட்டும் அவர்கள் சாதாரண மனிதர்களையும், பாமரர்களையும் தேடி வருகிருர்

ô6ዥ • -

தேர்தல்கள் முடிந்து வெற்றி பெற்றுப் பதவிகளில் போய் அமர்ந்த பின்பு அவர்களைத் தேடிச் சாதாரண மனிதர்களும், பாமரர்களும் போனல் சந்திப்பதற்கு நிதான மும் பொறுமையும் இல்லாமல் தட்டிக் கழிக்கிருர்கள் அவர்கள்.

நிறையப் பேரைச் சந்தித்துப் பேசினலே தங்கள் செல்வாக்கும், (பெருமையும் குறைந்து விடுமோ என்றுகூட எண்ணுகிருர்கள்.

இதில் சில தலைவர்கள், பிரமுகர்களின் மனப்பான்மை மிகவும் விநோதமானதாக இழ்க்கும். கூழுக்கும் ஆசை,

மீசைக்கும் ஆசை என்பது போல் தங்களே நிறையப் பேர்

தேடி வர வேண்டும் என்ற ஆசைக்குத் குறைவிருக்காது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/70&oldid=562312" இலிருந்து மீள்விக்கப்பட்டது