பக்கம்:சிந்தனை வளம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 69

அதே சமயம் அப்படித் தேடி வருகிறவர்களைப் பார்த்து நாலு வார்த்தை பேசவும் முடியாது.

சினிமா உலகிலிருந்து புறக்கணிக்கப்பட்டுத் தூக்கி எறியப்பட்டிருந்தாலும், இப்போதுதான் ஷாட்டிங்கி லிருந்து வருகிறேன். மேக்-அப்பைக்கூடச் சரியாகக் கலைக்க நேரமில்லை’ என்று கூறிக் கொள்ளும் மாஜி நடிகனைப் போலத் தன்னைச் சுற்றிலும் சதா ஒரு கூட்டம் இருப்பது போலப் பாவித்துக் கொள்ளாவிட்டால் இந்நாட்டில் பல அரசியல்வாதிகளால் உயிர் வாழவே முடியாது.

மக்களில் யாரையும் சுலபமாகக் காண்பதற்கோ, பேசு வதற்கோ, பழகுவதற்கோ தனக்கு நேரமில்லை என்று கூறிக் கொள்வதிலேயே இந்நாட்டு அரசியல் தலைவன் பெருமைப் படுகிருன், இந்நாட்டு அரசியல்வாதிகளின் ஆஷாடபூதித் தனங்களில் இதுதான் தலைமையானது.

தனது பெருமைகளிலும் கெளரவங்களிலும் முக்கிய மானது, தன்னை மற்றவர்கள் அத்தனே சுலபமாகப் பார்த்து விட முடியாது என்பதுதான் எனப் பெருமைப்பட்டுக் கொள்வதைப் போல் ஒரு ஜனநாயக நாட்டில் கேவலமான பெருமை வேறென்றும் இருக்க முடியாது.

முதன் மந்திரியாக இருந்த காலத்திலும், அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராக இருந்த போதும், இவை இரண்டுமே இல்லாமல் மக்களின் அன்புக்குரிய பெருந்தலைவ ராக இருந்த போதும் காமராஜ் அவர்கள் காட்சிக்கு எளிய 'வராக வாழ்ந்தார். அது சென்னையோ, மதுரையோ, டில்லியோ, பம்பாயோ அவர் தங்கியிருக்கும் இடத்தில் அவரைக் காண்பதற்காகத் தேடிச் செல்பவர்களே அவர் ஒரு போதும் ஏமாற்றியதோ தட்டிக் கழித்ததோ கிடையாது.

நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்களே அலுக்காமல், சலிக்காமல் சந்தித்தார் அவர். எங்கோ ஒரு சாதாரணக் குக்கிராமத்திலிருந்து நம்பிக்கையோடு தேடி வருகின்ற சாதாரணக் கட்சித் தொண்டனிலிருந்து, டில்லியிலிருந்து சந்திக்க ஏற்ற நேரம் காலம் எல்லாம் முன்கூட்டியே

சி,-5 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/71&oldid=562313" இலிருந்து மீள்விக்கப்பட்டது