பக்கம்:சிந்தனை வளம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 நா. பார்த்தசாரதி

ஏற்பாடு செய்து கொண்டு வரும் பெரிய பிரமுகர் வரை காமராஜ் அவர்களை ஒரு சிரமுமில்லாமல் சந்திக்க முடிந்தது. - பொது வாழ்வில் ஈடுபடுபவன் என்பவன் தெருவோரத் தில் முளைத்திருக்கும், சுலபமாகக் கிடைக்கிற மருந்துப் பச்சிலையைப் போல மக்களுக்குக் கிடைக்க வேண்டும். மலை உச்சியில் போய் மட்டுமே அடைய முடிந்த சஞ்சீவி பர்வதத்து மருந்துச் சரக்காக அவன் இருக்கக் கூடாது.

காந்தி, நேரு, காமராஜ் போன்ற தலைவர்கள் கடைப் பிடித்த இந்த அபூர்வமான எளிமை இன்று இல்லை.

தெய்வங்களைக்கூட நேரே கண்டும் வரம் கேட்டும் வாங்கி வந்துவிடலாம் போலிருக்கிறது. சில தலைவர்களையும் மந்திரிகளையும் சந்திக்கவே முடிவதில்லை.

ஜனநாயகத்தில் மக்களையும் பத்திரிகையாளர்களையும் சந்திக்காமல் ஒதுங்கி உயர்த்திக் கொள்கிறவர்களை மக்கள் ஒருநாள் ஒதுக்கி விடுவார்கள்.

ஹெரால்டு வில்லன் நாளைக் காலையில் பிரிட்டிஷ் பிரதம மந்திரி பதவியிலிருந்து விலகப் பேர்கிரு.ர். லண்டனில் நம்பர் 10 டவுனிங் தெருவின் முகப்பில் எந்தக் கூட்டமும் இல்லை. எப்போதுமே அந்த இடம் அப்படித்தான் இருக்குமென்றும், நம்மூர் மாதிரிப் பதவியிலிருப்பவனைப் பட்டிக்காட்டான் யானை பார்த்த மாதிரிப் பார்ப்பது வழக்கமில்லை என்றும் அங்குள்ள நண்பர்கள் கூறினர்கள்.

ஸ்காட்லாந்திலிருந்து உல்லாசப் பயணம் வந்த பள்ளிக் குழந்தைகளின் கூட்டம் ஒன்று 10, டவுனிங் தெரு வாயிலில் நிற்கிறது. வில்சனே மலர்ந்த முகத்தோடு வெளியே வந்து குழந்தைகளிடம் குலாவுகிருர். மழலை மாரு த ஆங்கிலத்தில் ஒவ்வொரு குழந்தையும் மிஸ்டர் வில்சன்!” என்று அவரை விளித்து அழைப்பதைப் பார்த்து வியக்க முடிகிறது. ஒரு பரபரப்பு இல்லை. எல்லாம் சகஜமாக இருக்கிறது.

இங்கு அப்படி நடக்குமா? எத்தனை கெடுபிடி? எத்தனை ஜபர்தஸ்து? எவ்வளவு போலீஸ் எல்லாம் இருக்கும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/72&oldid=562314" இலிருந்து மீள்விக்கப்பட்டது