பக்கம்:சிந்தனை வளம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனப்பான் மை!

நம்முடைய நகரங்களிலும், நகர்ப்புற வாழ்விலும் இப்போதெல்லாம் டாக்டர்களால் மருந்தும், சிகிச்சையும் அளிக்க முடியாத ஒரு புதுவகை வியாதி தென்படுகிறது. பெரும்பாலான சமயங்களில் இதை ஒரு வியாதி என்று புரிந்து கொள்வதைவிட நாகரிகமென்றும், ஃபாஷன் என்றுமே நம் மக்கள் புரிந்து கொண்டிருக்கும் அபாயமும் இருக்கிறது.

பூரணமான அறியாமையைக்கூட மன்னிக்கலாம், அறிந்தது போன்று பாவிக்கும் அறியாமையையும், அறியா ததுபோல் பாவிக்கும் அறிவையும் மன்னிக்கவே முடியாது; மன்னிக்கவும் கூடாது. .

இந்த இரண்டிலும் பின்னதாகிய, "அறியாததுபோல் பாவித்துக் கொண்டு சும்மா இருந்துவிடும் அறிவுதான்' இன்று நாட்டைக் குட்டிச்சுவராக்குகிறது. ஒன்றில் மட்டு மில்லை. பல துறைகளுக்கும் இது பொருந்தும்.

பல சமயம் உங்கள் காதில் அடிக்கடி விழும் உபதேசம் என்ன? எல்லாம் அப்படித்தான் இருக்கும்; கண்டு கொள் ளாமல் போங்க’ என்றும், இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?’ என்றும் நீங்கள் கேள்விப் படுகிற வாசகங்கள்தான் நான் மேலே குறிப்பிட்ட நோயினது முதல் அடையாளங்கள், பொறுப்பு, அதிகாரம், நிர்வாகம்-மொத்தத்தில் ஆட்சியிலிருப்பவர்கள் ஏளுே தானே மனப்பான்மையோடு இருந்தால் மக்கள்தான் தட்டிக் கேட்க வேண்டும். மக்களே ஏளுேதானே மனப் மான்மையோடு இருந்தால் யார் தட்டிக்கேட்பது? தட்டிக் கேட்க ஆளில் லா விட்டால் எந்தத் தப்பும் வேகமாக வளர் இயல்பு . சுதந்திரமும், ஜனநாயகமும், தேர்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/75&oldid=562317" இலிருந்து மீள்விக்கப்பட்டது