பக்கம்:சிந்தனை வளம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 4 நா. பார்த்தசாரதி

களும்கூட நாம் எதிர்பார்க்கும் நல்ல விளைவுகளைத் தராமல். போவதற்குப் படித்தவர்களிடமும், மத்தியதர வர்க்கத், தினரிடமும் பரவலாக இருக்கும் இந்தக் கோழைத்தனமும், ஏனேதானே மனப்பான்மையுமே காரணம்.

ஏளுேதானே மனப்பான்மையை மேற்கொள்வதில் கூட இரண்டு மூன்று விதங்கள் இருக்கின்றன. தனக்குச் சம்பந்த, மில்லாத விஷயங்களில் ஏனேதானே மனப்பான்மையோ டிருப்பவர்கள், பொது விஷயங்களில் மட்டும் ஏளுேதானே. மனப்பான்மையோடிருப்பவர்கள், பேதா பேதமில்லாமல் சகல விஷயங்களிலும் ஏனேதானே மனப்பான்மையோடு இருப்பவர்கள் என்று இவர்களில் பல ரகங்கள் உண்டு. -

ரெளடிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் இந்த ஏனே. தானே மனப்பான்மையைப் பார்த்து எப்போதுமே படு: கொண்டாட்டம். மேற்குறிப்பிட்ட சமூக விரோதச் சக்தி கள் பொது வாழ்விலும், தனி வாழ்விலும் கொழுத்துச் செழித்துக் கிளை பரப்பி வளர்வதற்கே இந்த ஏளுேதானே. மனப்பான்மைதான் உரம்.

நகரங்களின் வசதிகளும், கிராமங்களின் ஒதுக்குப்புற மான இயல்புகளும், தனித்தன்மைகளும் கொண்ட ஒர். ஊரில் சிறிதுகாலம் நான் தமிழாசிரியராக இருந்தபோது ஏற்பட்ட அனுபவங்களையும் சென்னை நகர அனுபவங்களை யும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஏனே தானே மனப்பான் மையின் விகிதாசாரம்-வளர்ச்சி அளவு எல்லாம் புரிகிறது. ஒரு காண்ட்ராஸ்ட்’கூட இதில் இருக்கிறது. -

அந்தக் கிராமத்தில் எதிலும் ஒதுங்கிப் போகிற, கண்டு கொள்ளாமல் இருந்து விடுகிற மனப்பான்மையை நான் அதிகம் பார்த்ததில்லை. கிராமத்தில் எந்தத் தெருவில் எந்த வீட்டில் நல்லது கெட்டது நடந்தாலும் அதில் மற்றவர் களுக்கும் பங்கு இருக்கும். மற்றவர்கள் விலகிப் போவதோ, பாராமுகமாக இருந்து விடுவதோ நேரவே நேராது. எந்த விஷயமும் ஊர் முழுவதும் அக்கறையுள்ள விஷயமாக இருக்கும். . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/76&oldid=562318" இலிருந்து மீள்விக்கப்பட்டது