பக்கம்:சிந்தனை வளம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. ஆஸ்பத்திரிகளும் சர்க்கார் அலுவலகங்களும்...

நம்முடைய சர்க்கார் அலுவலகங்களில் நுழையும் போது ஆஸ்பத்திரிகளின் நினைவும், அரசாங்க ஆஸ்பத்திரி களின் நெரிசலான பொது வார்டுகளில் நுழையும்போது சர்க்கார் அலுவலகங்களின் நினைவும் தவிர்க்க முடியாமல் எனக்கு ஏற்படுவதுண்டு. உங்களிலும் சிலருக்கு அப்படி ஏற் பட்டிருக்கலாமோ என்னவோ? காரணம், இரண்டிலுமே நோய்களும், நோயாளிகளும் இருப்பதுதான். ஒன்றில் நாற் காலிகளிலும், கேபின்களிலும் உத்தியோக நோயாளிகள் உட்கார்ந்திருக்கிருர்கள். மற்ருென்றில் கட்டில்களில் படுக்கைகளில், நோயாளிகள் படுத்திருக்கிருர்கள். அவ் வளவுதான் வித்தியாசம். ஒன்றில் எந்தச் சிகிச்சையாலும் நோய்கள் தீர்வதே இல்லை. மற்ருென்றில், நோயோ நோயாளியோ தீர்வதுண்டு.

எல்லா வகையான சர்க்கார் அலுவலகங்களிலும் மந்த புத்தி, நாட்களைக் கடத்துவது, தட்டிக் கழிப்பது. விபரம் புரியாமை ஆகிய நோய்கள் பொதுவாக உள்ளன. மிகச் சில அலுவலகங்கள்கூட இதற்கு விதிவிலக்காக இருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். நல்லெண்ணமுள்ள புதிய நபர்கள் வேண்டுமானல் சில இடங்களை மாற்றலாம். -

சர்க்கார் அலுவலகங்கள், பொது மக்களுக்காகப் பொதுமக்களின் வரிப் பணத்திலிருந்து நடத்தப்படுபவை. ஆளுல், அந்த அலுவலகங்களில் பொது மக்கள் அடிமை களைப் போலவும், குற்றவாளிகளைப் போலவும் நடத்தப்படு படுகிருர்கள் என்பதுதான் நடைமுறை உண்மை. பிச்சைக் காரர்களைப் போல் பொதுமக்கள் அங்கே ஏங்கி நிற்க நேர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/82&oldid=562324" இலிருந்து மீள்விக்கப்பட்டது