பக்கம்:சிந்தனை வளம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 8蓝饰

தங்களைத் தேடி வருகிற பொதுமக்களை, அவர்கள் படித்தவர்களாக இருந்தாலும், பாமரர்களாக இருந்தாலும், இழுத்தடிப்பது, அலேக்கழிப்பது, பந்தாடுவது, குழப்புவது, காலதாமதப்படுத்துவது இவை எல்லாம் நம் சர்க்கார்" அலுவலகங்களில் சகஜமாகவும், வழக்கமாகவும் இருந்து வருகிறது. இவற்றை - இந்த நோய்களை சுதந்திரம், ஜனநாயகம், கால வளர்ச்சி, விஞ்ஞான மாறுதல்கள் என்ற: எந்தவித மருந்துகளும் இதுவரை பூரணமாகக் குணப்படுத்த, வில்லை என்றே தோன்றுகிறது. பிரிட்டிஷார் நம்மை. விட்டுப் போய்ப் பல ஆண்டுகளாகியும் இந்த 'ரெட்டே ப் பிஸம்’ என்ற நோய் நம்மை விட்டுப் போக மறுக்கிறது. இதற்கு யார் காரணம்? -

இவையெல்லாம் வெள்ளைக்கார ஆட்சி நமக்கு மிச்சம் வைத்துவிட்டுச் சென்ற சொத்துக்கள் என்று சிலர் சொல். கிருர்கள். அது சரி என்று எனக்குப் படவில்லை.

இங்கிலாந்திலுள்ள ச ர் க் கார் அலுவலகங்கள், தபாலாபீசுகள், பாங்குகள் எல்லாவற்றையும் பார்த்த பின் நமது நோய்கள் நூற்றுக்கு நூறு சதவிகிதம் சுதேசித் தன்மை கொண்டவையே என்ற முடிவுக்கு நான் வந்தேன். மாதிரிக்கு இரண்டு நாட்டிலுமுள்ள சில அலுவலகங் களை ஒப்பிட்டுப் பார்க்கலாம். அங்குள்ள பாங்குகளில் லிவு நாட்களில் கூடப் பணம் எடுக்க வழி உள்ளது. -

ஜனதா அரசின் வெளியுறவு மந்திரி வாஜ்பாய், எவ்வளவோ துரிதப்படுத்த முயன்ற பின்னும்கூட, ஒர் இந்தியப் பிரஜை பாஸ்போர்ட் வாங்குவது என்பது இன்னும் நாட்கணக்கில் - வாரக் கணக்கில் இழுபடக் கூடிய காரியமாகவே உள்ளது.

பிரிட்டனில் அப்படி இல்லை. எந்தத் தபாலாபீஸிலும் ஸ்டாம்ப் வாங்குவது போலவோ, மணியார்டர்ஃபாரம் வாங்குவதுபோலவோ வெகு சுலபமாக ஒரு பிரிட்டிஷ் பிரஜைதன் பாஸ்போர்ட்டை வாங்கி விடமுடியும். தாமதம், இழுத்தடிப்பது, அலேக்கழிப்பது என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/83&oldid=562325" இலிருந்து மீள்விக்கப்பட்டது