பக்கம்:சிந்தனை வளம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

语名 நா. பார்த்தசாரதி

போஸ்ட் ஆபீஸ் வாசலிலோ, இரயில் நிலைய முகப் பிலோ, டெலிஃபோன் பூத் மாதிரி சிறிய கூண்டுகள் புகைப் படக் கருவிகளுடன் உள்ளன. இவற்றில் ஆள் கிடையாது. போட்டோ எடுத்துக் கொள்ள விரும்புகிறவரே கூண்டுக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டு காசு போட வேண்டிய துவாரத்தில் காசைப் போட்டால், ஒரு நிமிஷத்தில் எதிரே உள்ள காமிரா படத்தை எடுத்துப் பிரிண்டுகளைக் கொடுத்து விடும். அந்தப் படங்களை ஒட்டி விண்ணப் பத்தைப் பூர்த்தி செய்து தபாலாபீஸில் கொடுத்தால் அதிக பட்சம் அரைமணி நேரத்தில் பாஸ்போர்ட் கைக்கு வந்து சேர்ந்துவிடும். தாமதமே ஆகாது.

இப்படி அரைமணி நேரத்தில் பாஸ்போர்ட் கைக்கு வருவதை நம் நாட்டில் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. காரியங்களை இழுத்தடித்துத் தாமதப்படுத்திச் செய்தால் தான் தங்களை மதிப்பார்கள் என்று ஒவ்வொரு சர்க்கார் அதிகாரியும் நினைக்கிற நாடு இது. தாமதம்தான்

கெளரவமா?

போலி கெளரவம், அலைக்கழிப்பது, தாமதப்படுத்துவது பிறருக்கு உதவ முடியாமல் செய்து கொள்வதன் மூலமே தங்களை உயர்த்திக் கொள்ள நினைப்பது, வறட்டு ஜம்பம் இவற்றை ஏதோ ஒரு விகிதாச்சாரத்தில் கலந்தால், அந்தக் கலவைதான் இந்திய சர்க்கார் அதிகாரியாக இருக்கும்.

வெள்ளைப்பளிங்கு இழைத்து, மொலைக் பாவி, எவ்வளவு பிரமாதமான கட்டிடத்தை சர்க்கார் அலுவலக உபயோகத்துக்குக் கொடுத்தாலும் மூன்றே நாளில் குப்பை, அழுக்கு, லெட்ஜர் மலைகள், ஃபைல் குவியல்கள் எல்லாம் சேர்ந்து ஒரு காகித ஆஸ்பத்திரியாக அது ஆகிவிடும் இங்கே. இட சுத்தம், கை சுத்தம், ஒழுங்கு பார்க்கப் பளீரென்று இருப்பது இவை எல்லாம். நமது சர்க்கார் அலுவலகங். - களோடு ஏன் நிரந்தர விரோதம் பாராட்டுகின்றன

என்பதே புரியவில்லை. . . . . . . . . . .

உலகின் மற்ற முன்னேறிய தேசங்களின் அதிகாரிகள் எல்லாம் தங்களைத் தேடி வருகிறவர்களின் காரியங்களைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/84&oldid=562326" இலிருந்து மீள்விக்கப்பட்டது