பக்கம்:சிந்தனை வளம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 83

துரிதமாக முடித்துக் கொடுப்பது எப்படி என்று முயன்று சாம்ர்த்தியத்தைக் காட்டுகிருர்கள் என்ருல், நம் சர்க்கார் அதிகாரிகள் காரியங்களை உடனே முடித்துத் தருவது என்னும் பாவத்தைச் செய்து விடாமல், இழுத்தடிப்பதில் சாமர்த்தியத்தைக் காட்டி வருகிருர்கள். பொது நிறுவனங் களான பாங்குகள், இன்ஷஅரன்ஸ் அலுவலகங்கள் ஆகிய வற்றில் கஸ்டமர்களுக்கு உதவாமலிருப்பது எப்படி என்பதில் விசேஷப் பயிற்சி அளிக்கப்பட்ட நபர்கள் இங்கே நிரம்பியிருக்கிருர்களோ என்று கூட நமக்கு அடிக்கடி நினைக்கத் தோன்றும்.

மாத முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் மின்சாரக் கட்டணம் கட்டும் இடம், பால் கூப்பன் வாங்கும் இடம் இவைகளில் போய்ப் பார்த்தால் உங்களுக்கு இது புரியும். நாலு கவுண்டரில் பணம், செக்குகள் வாங்க ஆட் கள் இருப்பார்கள். இரண்டு கவுண்டரில் க்யூ நீளமாக இருக்கும். மற்ற இரண்டு கவுண்டர் ஆட்கள் யாரோடா வது பேசிக் கொண்டிருப்பார்கள் அல்லது நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருப்பார்கள்.

சும்மா இருக்கிற கவுண்டரில் விசாரித்தால், இங்கே கேஷ் மட்டும்தான். அந்தக் கவுண்டருக்குப் போ' என்று பந்தாடுவார்கள். இங்கே செக் மட்டும்தான். அந்தக் கவுண்டருக்குப் போ’’-என்பார் செக் பகுதி ஆசாமி. எதில் வேலை குறைவாயிருக்கிறதோ-அல்லது வேலையே இல்லையோ அதைத் தாங்கள் செய்து கொண்டிருப்பதாகப் பாவிப்பதும், சொல்லிக் கொள்வதும் நம் அதிகாரிகளின் வழக்கம். பொதுமக்களுக்கு உதவுவது என்பது அவர்கள் இரத்தத்திலேயே ஊருத விஷயம் போலும். நல்ல விதிவிலக்கு ஒன்றுகூட இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். சென்னைப் பல்கலைக் கழக அலுவலகத்திற்குப் போனல், எதைப் பற்றி யாரிடம் விசாரித்தாலும் புரியாது, தெரியாது என்ற மழுப்பல் பதில்கள்தான் கிடைக்கும். அவ்வளவு புரியாமை, அறியாமைகளுக்கு மத்தியில்,ஒரு முதிய முஸ்லீம் அலுவலர், தம்மால் முடிந்த வரை வருகிறவர்களுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/85&oldid=562327" இலிருந்து மீள்விக்கப்பட்டது