பக்கம்:சிந்தனை வளம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. நடுநிலை’ என்னும் நாடகம்

தமிழில் நடுவு நிலைமை’ என்ருெரு வார்த்தை திருக் குறள் காலத்திலிருந்தே புழக்கத்தில் இருந்து வருகிறது. திருவள்ளுவர் அந்தத் தலைப்பில் பத்துக் குறளையும் பாடி விட்டுப் போயிருக்கிரு.ர். ஒருவேளை அதற்கு முன்னலிருந்தே இவ்வார்த்தை புழங்கியிருக்கலாம்.

அந்தப் பழைய வார்த்தை அன்று பயன்படுத்தப்பட்ட அர்த்தத்திற்கும் இன்று நாம் பயன்படுத்துகிற அர்த்தத் திற்கும்.நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. பழைய அர்த்தம் அநேகமாக இன்று செத்துவிட்டது.

இன்று அந்த வார்த்தை கதகளி, ஒட்டந் துள்ளல் ஆகிய நாடகங்களில் பயன்படுத்துகிற முகமூடி போல், பலவற்றை மறைக்கும் முகமுடியாகப் பயன்படுகிறது. கொஞ்சம் கலா பூர்வமான முகமூடி என்றுகூடச் சொல்லிக் கொள்ளலாம். நடுநிலைக் கொள்கை, நடுநிலைப் பத்திரிகை, நடுநிலை யாளர், நடுநிலைமை முதலான எல்லா வார்த்தைகளும், பிரயோகங்களும் இன்று முகமூடியாகவே பயன்பட்டு வருகின்றன. முகமூடி எவ்வளவு அழகாயிருந்தாலும் அதன் நோக்கம் மூடுவதுதான்.

அழுகிய புண்ணுக்குப் புனுகு பூசிக் கெட்ட நாற்றத்தை மறைக்க முயல்வது போல், ஒரு மோசமான, அல்லது சுமாரான காரியத்தைப் பிரமாதமான வார்த்தையால் சொல்ல முயலும் முயற்சியாக இன்து அது இருக்கிறது. பல மோசமான விஷயங்கள் இன்று பிரமாதமான வார்த்தை களால் எழுதவும் பேசவும் படுகின்றன. அப்படிப்பட்ட பிரமாதமான வார்த்தைகளில் நடு நிலைமை என்பதும் ஒன்ருக இருக்கிறது. உயர்ந்த பொருளில் வழங்கிய அதன் கடந்த காலப் பெருமையோடு, உயர்ந்த ரகத்தினைச் சேர்ந்த வார்த்தையாக மட்டும் இருந்து, பொருள் தேய்ந்து போய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/88&oldid=562330" இலிருந்து மீள்விக்கப்பட்டது