பக்கம்:சிந்தனை வளம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 நா. பார்த்தசாரதி

'நடுநிலை-என்ற வார்த்தை இன்று, கையாலாகாத். தனம் அல்லது சும்மா இருப்பது என்ற ரீதியில்தான் புரிந்து கொள்ளப்படுகிறது.

பட்டப்பகலில் நட்ட நடுத் தெருவில் ஒரு பெண்மணி யிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ஒருவன் அவள் நகையைப் பறிப்பதை, இன்றைய நடுநிலை’யாளர் (இன்றைய அர்த்தத்தில்தான்) ஒருவர் பார்க்கிருர் என்று வைத்துக் கொள்ளலாம். அவர் என்ன செய்ய வேண்டும்? மிரட் டித் திருடுவதும், பிறருக்குரியதை அபகரிப்பதும், ஆக்கிரமிப் பதும் தவறு. ஆகவே, அபகரிக்கிறவனையும், ஆக்கிரமிக்கிற வனையும், தவிர்த்து விட்டுப் பறிகொடுக்கும் பெண்ணைச் சார்ந்து நின்று அவளை ஆதரிப்பதே நடுநிலைமை என்று. முடிவு செய்வதுதான் நியாயமாக இருக்கும். ஒழுங்காகவும், உரியதாகவும் இருக்கும்.

ஆல்ை, இன்றைய நடுநில அர்த்தத்தின்படி அவர் எப்படி முடிவு செய்வார்? பெண்ணை ஆதரித்தால் திருடனுக்குக் கோபம் வரும், திருடனே ஆதரித்தால் பெண்ணுக்குக் கோபம் வரும். இருவருடைய கோபத்தை யும் தவிர்க்க ஒரே வழி-இருவரையுமே கண்டு கொள்ளா மல் நடுவராக இருப்பதுதான் என்னும் முேடிவுக்கு அவர். இன்று வரக்கூடும். பெண்ணே ஆதரித்து விளுக அவளுக்கு வேண்டியவர் என்னும் அவப் பெயரைத் தாங்குவதற்குப் பதில் திருடனேயே ஆதரித்து விடலாம் என்றும் அவர் வினேதமான ஒரு முடிவுக்கு வரக்கூடும். இன்றைய அர்த்தத் தில் இவைதான் நடுநிலைக் கொள்கை. ஆளுல், ஒரிஜினல் அர்த்தத்தில் இது கடைந்தெடுத்த கையாலாகாத்தனம். நல்லது கெட்டது என்று வரும்போது நல்லதைச் சார்ந்து நிற்பதுதான் நடுநிலை. நல்லதற்கும் தீயதற்கும் நடுவில் நிற்பதோ, தீயதைச் சார்ந்து நிற்பதோ நடுநிலை ஆகாது, நடுநிலை என்ற வார்த்தையின் ஒரிஜினல் அர்த்தத்தில் இன்று கடைப்பிடிக்கப்படும் நடுநிலை முரண்பாடானது, பொருத்த மற்றது, பிரயோஜனமில்லாதது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/90&oldid=562332" இலிருந்து மீள்விக்கப்பட்டது