பக்கம்:சிந்தனை வளம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 89.

இந்தப் பிளாட்பாரத்தில் நமக்கு வேண்டாதவர்கள் இருக்கிருர்கள். அந்தப் பிளாட்பாரம் வெகு தொலைவில் இருக்கிறது, உடனே போக முடியாது. ஆகவே, "அபாயகர மான லாரிகள், பஸ்கள், பயங்கர வேகத்தில் ஒடினலும் பரவாயில்லை. நடுரோட்டிலேயே நின்று தொலைக்கலாம்’ என்று முடிவெடுப்பதைப் போன்றது இத்தகைய இரண்டுங் கெட்டான் நடுநிலைக் கொள்கை. -

"நான் அல்லேன்டு-அல்லேன்டு’ என்ற ஆங்கிலத் தொடர்களைக் கூட்டுச் சேராமை-கூட்டுச் சேர்தல், நடு நிலைமையின்மை-நடுநிலை என்று மொழி பெயர்ப்பதே தர்க்க ரீதியாகத் தவறு. கூட்டுச் சேர்வதற்கும், கூட்டுச் சேராமைக்கும்-நடுநிலைமைக்கும் தொடர்பே இல்லை. நடு நிலை என்பது முற்றிலும் இவற்றிலிருந்து வேருனது.

ஒரு பக்கத்துத் தராசு இன்னொரு பக்கத்துத் தராசோடு இணைந்து கூட்டுச் சேர்ந்தால்தான் நிறுவையில் நடுநிலையே கிடைக்கும். நல்லவன் ஒருவன் பிற நல்லவர்களோடு கூட்டுச் சேருவதும்-நல்லவர்கள் அல்லாதவர்களோடு கூட்டுச் சேராமையும்கூட நடுநிலைமைதான். நடுநிலை நாடுகள்’ என்ற மொழிபெயர்ப்பு ஒரு கண்ணுேட்டத்தில் சரியில்லை. கூர்ந்து கவனித்தால் உலகில் எதுவுமே நடுநிலை நாடாக இராது. இருக்க முடியாது. கண்டிக்க வேண்டியதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதும், பாராட்ட வேண்டிய தைப் பாராதது போலக் கண்ணை மூடிக்கொள்வதும் நடுநிலை அல்ல. தந்திரம் மட்டுமே. தந்திரக்காரர்களை யாருமே நம்ப

மாட்டார்கள். ஆனல், அவர்களுக்குப் பயப்படுவார்கள்.

"கிரடிபிலிடி அல்லது பிறர் நம்பும் தன்மை வேண்டுமா அல்லது பிறர் நம்மைக் கண்டு தற்காலிகமாக மிரண்டு பயப்படும் தன்மை வேண்டுமா என்பதுதான் இன்று நம்முன்னுள்ள கேள்வி. நாட்டின் முன்னுள்ள பெரிய கேள்வி.

அதிதீவிர விருப்பு வெறுப்புக்களே உடைய பத்திரிகை கள் தங்களை நடுநிலைப் பத்திரிகைகள்' என்று கூறிக் கொள்வதும், பல விஷயங்களில் தீவிர விருப்பு வெறுப்புள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/91&oldid=562333" இலிருந்து மீள்விக்கப்பட்டது