பக்கம்:சிந்தனை வளம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 நா. பார்த்தசாரதி

படுவதைக் காண முடிகிறது. வினிக்’காக இருப்பது எல்லா வயதினருக்கும் உரியதாகியிருக்கிறது இப்போது.

ஒன்றைத் தொடங்காமலே, அதைத் தொடங்குவது பற்றிய நினைப்பிலேயே தோற்றுப்போவது மிகவும் கேவலம், தொடங்காமலேயே தோற்றுவிடும் போர்கள் சரித்திரமாவ் தில்லை. ஒன்றைத் தொடங்கு முன்பே அதில் தோற்பதும் தற். கொலையும் ஒன்றுதான் என்று துணிந்து சொல்லலாம்.

மூளைச் சோம்பலின் காரணங்களில் முதன்மையானது, நம்பிக்கையின்மை அல்லது நம்பிக்கை வறட்சி. நம்பினுேர் கெடுவதில்லை’ என்ற ம்காகவி பாரதியின் வாக்கை இந்த இடத்தில் இந்த அர்த்தத்தில் நினைத்துப் பாருங்கள்.

தேசப் படத்தில் எந்த மூலையில் இருக்கிறது என்று: கண்டுபிடிக்க முடியாத, மேற்குக் கடற்கரைக் கிராமம் ஒன்றிலிருந்து புறப்படுகிற குறைந்த படிப்புள்ள ஒரு மலையாளி, இந்தியாவின் எந்த மூலையில் இருக்கும் எந்தக் கிராமத்திலும் ஒரு டீக் கடையைத் தொடங்கி, வெற்றி கரமாக அதையும் தன்னையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது. இதற்கு என்ன காரணம்? ஒரு முயற்சியைத் தொடங்குவதற்கு முன் அதைப் பற்றிய நினைப்பிலேயே அவன் தோற்றுப் போவது கிடையாது. நம்பிக்கையையும், முயற்சியையும் காயடித்து விடுகிற படிப்பால் தான் நாட்டில் மூளைச் சோம்பல் பெருகுகிறது. -

1976-ல் நான் குவைத்தில் ஒரு வாரம் தங்கியிருந்த போது பலருக்குச் சாப்பாடு போடும் ஒரு 'காக்கா'வைச் சந்தித்தேன். கள்ளிக்கோட்டைக்குப் பக்கத்திலுள்ள ஒரு சின்னக் கிராமத்திலிருந்து புறப்பட்டுவந்த அந்தச்சிறிய மணி தனின்பெரிய நம்பிக்கை என்னை மலைக்கச் செய்தது. நம்பிக் கையும், முயற்சியும் இல்லாமல் டபிள் பி. எச். டி. வாங்கிய வனவிட, நம்பிக்கையோடும் முயற்சியோடும் தொலைதுாரத் தில் போய் வெற்றியடைகிற, இந்தக் குறைந்த படிப்புள்ள மலையாளியை நான் அதிகம் மதிக்கிறேன். காரணம், மூளைச் சோம்பல் என்பது என்னவென்றே இவனுக்குத் தெரிய வில்லை-தெரியாது; தெரிந்து கொள்ளவும் நேராது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/96&oldid=562338" இலிருந்து மீள்விக்கப்பட்டது