பக்கம்:சிந்தனை வளம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 95,下

நம்மைச் சுற்றியுள்ள பலரிடம் தன்னம்பிக்கைப் பற்ருக் குறை பயங்கரமாயிருக்கிறது. நம்மிடமிருக்கும் பஞ்சங் களில் எல்லாம் தலைசிறந்தது நம்பிக்கைப் பஞ்சமே. நம்பிக்கைப் பஞ்சம் எங்கே நிரம்பியிருக்கிறதோ அங்கே மூளைச் சோம்பலுக்குக் கொண்டாட்டம்தான்.

சில சமயங்களில், தெருவில் கடலை கூறு கட்டி விற்கிற ஓர் ஆயாவிற்கு இருக்கிற தன்னம்பிக்கைகூடக் கோடிக் கணக்கில் முதலீடு செய்து கம்பெனி நடத்துகிற ஒரு. தொழிலதிபருக்கு இல்லாததைக் காண்கிறேன். பரிதாபமாக இருக்கிறது. பட்டமரம் தளிர்க்காது. அவநம்பிக்கையி லிருந்து வெற்றி கிடைக்காது. கொசு ஒழிப்பு, காலரா ஒழிப்பு, மலேரியா ஒழிப்பு ஆகியவற்றுக்குப் பாடுபடுவதை, விட அவசரமாக, அவநம்பிக்கை ஒழிப்புக்குப் பாடுபட்டாக வேண்டும்.

எதிலும் சலிப்பு, விரக்தி, தோல்வி மனப்பான்மை இவை வளர்வது மோசமானது. இன்றைய கல்விமுறை, இன்றைய அரசியல், இன்றைய வர்த்தகம் எல்லாவற்றின் சூழ்நிலையும் நம்பிக்கை வளர்வதற்குச் சாதகமாக இல்லையே. சார்?’ என்று பலர் என்னைப் பதிலுக்குக் கேட்கலாம்.

நம்பிக்கை வளர்வதற்குரிய சூழ்நிலையில்தான் உங்க ளுக்கு நம்பிக்கை இருக்கும் என்ருல் அதில் ஒன்றும் பெருமை யில்லை. அவநம்பிக்கை வளர்வதற்குரிய சூழ்நிலையிலும். நீங்கள் நம்பிக்கையோடு முனைந்து நிற்பதுதான் ஆண்மை. சோதனை வரும்போது தைரியமாக எதிர் கொண்டு ஏற்று வெற்றி பெறுவது தான் வீரமாக இருக்குமே ஒழிய எந்தச் சோதனையும் வராததில் வென்றதாகப் பிரகடனப்படுத்திக். கொள்வது வீரமாக இராது; விவேகமாகவும் இராது.

முதலில் நாற்றங்காலிலேயே நோய் பிடித்துக் கெட்டுப் போகிற பயிர், வயல்களில் நடப்பட்ட பின் நல்ல விளைவைத் தர முடியாது. இன்றைய கல்விக் கூடங்களான பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் ஆகிய எல்லாவற்றிலும். கற்பவர் கற்பிப்பவர் ஆகிய இரு சாராரிடமும் நம்பிக்கை:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/97&oldid=562339" இலிருந்து மீள்விக்கப்பட்டது