பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பிரயாணம் பகு பகு தூரம். சிட்டச் சிட்ட ஸ்வரங்கள். கன கன ராகங்கள். எட்ட எட்ட மேருக்களின், கிட்டக் கிட்ட நிழல்கள். உயர உயரத் தாருவின் இலைகள் பூமிமேல் நெய்யும் குட்டிக் குட்டிக் கோலங்கள். மின்னா மினுக்கி, மின்மினிப் பூச்சிகள் ஸ்கஸக ஸ்ரிஸா கமகம் கதஸா தலபகரிகா கமதஸ்கஸா சிந்தா நதி என் எஸ்டேட்டில் ஒடும் எனக்கே சொந்த நதி அல்ல. சிந்தா நதி உயிரின் பரம்பரை லோகோஸ்ருதியின் மீட்டல் கங்கை இதன் கிளை.வாரத் தொடராகப் பாய்ந்தபோது சிந்தா நதி எனும் பொதுத் தலைப்பு தாங்கிக் கொண்டது. ஆனால் புத்தக உருவில், இந்த அலைகளுக்குத் தனித் தனித் தலைப்புக்கள் பாந்தம், தேவையெனப்பட்டது. சரி,வாருங்கள், இனி நதியில் இறங்கலாம். சிந்தா நதி தீரே சிந்தா விஹாரே. . . லா.ச.ராமாமிருதம் Plot 242, ஞானமூர்த்தி நகர், அம்பத்துரர், சென்னை-53 i-3-#996