பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 சிந்தாநதி இன்று செம்பருத்தஞ் செடி செண்டாவே மாறி விட்டது. இன்று இதன் தனி உவகை என்ன? கொழிப்பு கண்ணைப் பறித்தது. குங்குமப் பொட்டுக்கள். சிவப் பேறிய விழிகள். பறிக்க மாளாது எட்டா உயரங்களில் மோஹச் சிரிப்புகள். கண் தொட்டு, கைபட இயலா முடுக்குகளிலிருந்து மோனக் கொக்கரிப்பின் குலுங்கள். "என்னைப் பார். என் அழகைப்பார். என் அழகில் உனக் குப் பட்டதை எனக்குப் பாடு. பார். மகிழ். தொடாதே." தொடவில்லை. அப்படியே கிணற்றடியிலேயே அவனுக்கு அர்ப்பணம். இன்றைய பூஜை மாணலம். இன்று அவள் ரூபம். பெயர் மானஸ்ா. ஒவ்வொரு சம்பவத்தின் கழிப்பில், தம்பிடி வெள்ளித் தகடு அடைத்துக் கொண்டிருக்கிறது. உன் பிம்பம் தெரியும் கண்ணாடி என் பிம்பம் என் அபினி. மனித பரம்பரையின் நீண்ட நினைவுச் சரத்தினின்று பூக்கள், இதழ்கள், மணங்கள், நிர்மாலியங்கள் உதிர்ந்த வண்ணம், சொரிந்த வண்ணம். இவைதாம் எண்ணங்கள். மணிக்கூண்டின் ஒளித்துாலம் சுற்றியபடி, துரலம்பட்ட இடத்தில் அலைகள் வெளிச்சத்தில் குளிக்கின்றன. தூலம் நகர்ந்ததும், அந்த இடம் மீண்டும் இருள். எண்ணம் மனதை வெளிச்சமாக்குகிறது. மனதின் இருள் கலைகிறது. இருள் பிரம்மாண்டமான பாம்பு வாய். அதனுள் எண்ணங்கள் மின்மினிப் பூச்சிகள். மனிதன் அழியும் தன்மையன். ஆகவே மனமும் அழியும் தன்மைத்து. ஆனால், மனதின் விளைவாய் எண்ணங்கள் அழி வற்றன. இது அதிசயமன்று?