பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா, ச. ராமாமிருதம் 107 புழுவின் முதுகு வெடித்துப் பட்டாம் பூச்சி. வாத்து முட்டையினின்று அன்னக் குஞ்சு. இங்கு எண்ணம் என்கையில், ஞானம், விஞ்ஞானம், கலை, சமுதாயம், சரித்ரம், புராணம், இதிஹாசம், அனு மானம், புண் ணியம், இத்தனையும் இத்யாதியும், இவைகளின் எதிர் மறைகளும் உள் அடங்கியவை. அறியாமையும். அறிய அறிய இன்னும் அறியாமை. மானுடத்தின் பொற்காலம் ஏற்கெனவே நிகழ்ந்தாகி விட்டது. இல்லையேல், வேதங்களும், நாதங்களும், கீதங்களும் இவைகளின் ஸாரங்களும் எப்படி? அந்த ஸ்விஸ்ருதியின் உச்சத்தின் ஸ்விஸ்வரங்களின் இயக்கத்தில், இதயத்தோடு மனம் இழைந்து, நூற்ற எண் ணத்தின் இதழ்விரி பீடத்தில் அவனை இருத்தினோம். பிறகு அவனை இழந்தோம். எண்ணங்கள் முள் காடாகிவிட்டன. கண்ணுக்குள்ளேயே முள் அவனை மறைக்கிறது. ஆனால் அவன் இதய நந்தனத்துள்தான் இருக்கிறான். எல்லா பாதிப்புகளுக்கும் அப்பாற்பட்டவன், என்று அவனை வரித்துவிட்டு, நம் சுயநலத்தில், நம்முடைய சுகதுக்கங்கள், லாப நஷ்டங்களுக்கு அவனைப் பொறுப் பாக்கி, அவனை அழைப்பதில், பின்னர் அங்காலய்ப்ப தில் அர்த்தம், முறை என்ன ? நாம் அவனைப் பொறுப்பாக்கினாலும், அவன் தலையை நீட்டுபவனா?