பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 & சிந்தாநதி எந்தெந்த சமயம் என்னென்ன செய்ய, அவன் அறிவான். அவன் தாராமல் இருப்பானோ? அவன் என்ன சத்தியம் மறந்தவனோ? இதுவும் நமக்கு நம் சமாதானம். நம்பிக்கையின் பலம். ஆண்டவன் பலத்தைக் காட்டிலும் பெரிது. வாக்குத் தத்தங்களுக்கு வாக்குத் தத்தமானவன். வரை யற்றவன். நிகழ்ந்து கொண்டே யிருப்பவன் என்றெல் லாம் வர்ணித்துக்கொண்டே, அவனைப் பூரண ப்ரக்ஞையின் உறைவிடம் என்று அர்ச்சிக்கையில், அவன் எல்லைப் படுத்தப்படுகிறான். ப்ரக்ளுைக்கு, தான் ப்ரக்ளுையென்று தோன்றிய அப்போதே, ஆயுசும் பிறந்தது. எல்லைகள் வகுத்தாகிவிட்டன. சம்பவத்துக்கு மீட்சி கிடையாது. அதற்கு மறுமுறை கிடையாது. ஒவ்வொன்றும் அதன் ஒரு முறையுடன் அது அது சரி. நடந்ததை மீண்டும் நடத்த அவனாலும் முடியாது. கற்பு என்பது இதுதானோ, ஒரு தடவை ஒரே தடவை ஒன்று ஒற்றே எல்லாவற்றின் பெருவினை. ஒரு விதி. இந்த நோக்கில் எல்லாமே ஒன்று, ஒரு தரம் தான். ரத்து அற்ற ஒன்று.