பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 11 நாங்கள் மூவரும் சிரிப்போம். ஹரி சொல்வான். டேய் கண்ணா, உன் அப்பா இப்படியே பாதி தூரம் ஏற இடம் தேடிக்கிட்டு, சைக்கிளைத் தள்ளிக் கிட்டுப் போயி டுவாரு மிச்சப் பாதிக்கு ட்ராஃபிக் கெடுபிடி. அதுக்கும் தள்ளிக்கிட்டே போயிடுவாரு ஆபீஸும் வந்துடும். ” ரோசப்பட்டுப் பிரயோசனம்? ஆனால் இவன்கள் என்ன பழி தீர்த்துக் கொள்கிறான்கள்? 'நீதான் என்னையும் சேர்த்து வைத்து நன்றாக ஒட்டுகிறாயே!” என்றேன். “என்னப்பா, ஒரு நாளா, இரண்டு நாளா? அம்மா வயிற்றுள் சிசுவா, காலை உதைக்கிறபோதே, சைக்கிள் மிதியில்தான்.” கண்ணனும் கதை எழுதுகிறான். "நான் தான் சொன்னேனே, நீ Ace.” "அப்படிச் சொல்வதற்கில்லை. ஹரிக்கு அப்புறம் தான் நான்.” "அப்படியா?” ஹரி, கண்ணன், நாகராஜன், பள்ளி நாளிலிருந்தே ஒரு ஜமா. இன்னும் ஜமா. "ஒரு சம்பவம் நினைவுக்கு வரது, சொல்லட்டுமா?" அவன் என் பதிலுக்குக் காத்திருக்கவில்லை. அப்போது மூணாவது ஃபாரம் நான். நான் என்ன, நாங்கள். மேற்கு மாம்பலம் பள்ளி. ஒரு சனிக்கிழமை வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு சினிமா போனோம். மாட்டினி, சைதாப்பேட்டை நூர்ஜஹான். ட்ரிபிள்ஸ். நான் சைக்கிள் Bar, ஹரி மிதிச்சான், நாகராஜன் பின்னால் carrier, ஷோ முடிஞ்சு திரும்பி வரோம்.