பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ar", 413 - லா. ச. ராமாமிருதம் : "வாங்க, ஸ்டேஷனுக்குப் போவோம். ஏம்பா, நீங்க பள்ளியிலே படிக்கிறீங்களா, லர் க்களில் வேலை பார்க்கிறீங்களா? கேஸ் பதிவாகிவிட்டது. சைக்கிளும் பிடுங்கப்பட்டது. "சொல்லிட்டேன். தப்புப் பேர் தப்பு விலாசம் தந்தீங்க இதுக்குமேல் தண்டா. திங்கள் கிழமை, சைதாப்பேட்டை கோர்ட்டில் டாண்ணு 9 மணிக்கு ஆஜர். இது க்ளாஸுக்கு கட்’ அடிக்கிற மாதிரியில்லை. கோர்ட். ஞாபகமிருக்கட்டும்.” சைக்கிள் கடைக்காரனுக்குச் சொல்லிக்கலாம். தெரிஞ்சவன்தான். நாள் முழுக்கவே hire அப்போ ஒரு ரூபாய்தான். அவசரமா மூணு குயர் கணக்கு நோட் வாங்கட்டா வெளியில் நிக்கணும்னு வீட்டில் சொல்லிக் கலாம். ஆனால் கோர்ட்டில் தீட்டிடுவானே! உள்ளே தள் ளிட்டான்னா? நினைக்கவே பயமாயிருக்கே: மீட்க யார் வருவா? நடந்ததை வீட்டில் சொல்லவே தென்பில்லை. என்ன கிடைக்கும்னு தெரியும். என்னதான் செய்வோம்? தெரு முனைப் பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம் போட்டு, தப்புக் கேட்டுண்டு, தப்பிக்க வழிகாட்டச் சொல்ல, அதுக்கே கற்பூரம் கொளுத்தக் கால்ரூபா யேனும் வேணுமே! அஞ்சு பைசாவுக்கு இங்கே வழி யில்லே. அன்னி ராவுக்கு, ஞாயிற்றுக்கிழமை பூரா, நாங்கள் மூவரும் எங்களுக்குள் சபை கூட்டிக் குமைந்தும், வழி தென்படவில்லை. இதோ திங்களும் விடிந்துவிட்டது. பிள்ளையார் கைவிட்டுவிட்டார். அம்மா, முப்பாத்தம்மா நீயே கதி, ஊஹாம் தைரியம் கொடுக்கவில்லை. பயம், எச்சில் முழுங்க முடியல்லே. 'ஸ்பெஷல் க்ளாஸ்’னு சொல்லிட்டுக் கிளம்பு முன், கடைசி முறையாக அண்ணன், தம்பிமார், தங்கச்சியைப் சி ந - 8