பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சாகூவி கற்பூரம் அப்போது எனக்கு வயது ஆறு இருக்கலாம். ராயப் பேட்டையில் முத்து முதலித் தெருவில் குடியிருந்தோம். எதிர் வீட்டுப் பின் கட்டில், ஒரு தச்சனார் குடும்பம். பின்கட்டு பெரிய கட்டு அதில் குடும்பமும் பெரிய குடும்பம். அப்பா தச்சனார், அம்மா தச்சனார், மூன்று பிள்ளைகள் தச்சனார்- அவர்கள் சம்சாரம். பெரியவர் வாட்டசாட்டமாக, வண்டு விழியும் கிருதா மீசையு மாய்ப் பின்னால் நான் பார்த்த சினிமா வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி கம்பீரமாக அகன்ற நெற்றியை அரைப் பங்குக்கு மேல் அடைந்த தென்கலை நாமம். வீட்டினுள்ளேயே முற்றத்தில் தகரக் கொட்டகை போட்டு அதுதான் பட்டறை. மூன்று மகன்களைத் தவிர இரண்டு சின்னப் பையன்கள் வேலை செய்தார்கள். இவர்களுடைய உற்பத்தி அனேகமாகக் குழந்தைகளின் விளையாட்டுச் சாமான், சமையலறைப் பண்டங்கள்பொம்மை வண்டி, சொப்புகள் மரப்பாச்சி, உப்பு மரவை, அரிவாமனை, துருவலகாய், மத்து, மனை, ஸ்டுல், இத்யாதி, பெரிய சாமான்களில் இறங்குகிற மாதிரி அவர்களிடம் சாதனங்கள் இல்லை. பண்ணவும் தெரியுமோ தெரியாதோ?