பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 ன் சிந்தாநதி இங்கு நான் எப்படிச் சேர்ந்தேன்? எதிர் வீடுதானே ! பின்கட்டுக்கு அடிக்கடி போய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். இதெல்லாம் எப்படிச் செய்யறது? என்று அவர்களைத் தொணப்புவேன். அண்ணாஅப்பாவை அண்ணாவென்றுதான் அழைப்போம்அண்ணாவும் தச்சரும் ஒருநாள் அளவளாவுகையில், பையன் உங்கள் தொழிலில் அக்கறை காட்டுகிறான்; சும்மா உங்களிடம் வந்துபோய்க் கொண்டிருக்கட்டுமா? என்று கேட்டு, அவரும் உடனேயே சம்மதித்தார். நான் பள்ளிக்கூடம் இன்னும் சேரவில்லை. வீட்டிலேயே சொல்லிக் கொடுத்து எழுதப் படிக்கத் தெரியும். ஐயர் வீட்டுப் பையன் பட்டறையில் வேலை செய்வ தில் அவர்களுக்கும் பெருமை. "வெள்ளைக்காரன் தோத் தான், என்ன நிறம் பாத்தியா?" எனக்கு ஒரு இடத்துக்கு வேளையாகப் போய், வேளையாகத் திரும்பி வருவதாக ஒரு ஒழுங்கு படியட்டுமே! பின் என்ன, தச்சுத் தொழிலா என் பிழைப்பாக இருக்கப்போகிறது? ஏதோ பொழுது போக்கு. தாத்தா பட்டறையில் உட்கார்ந்து நிரந்தரமாக வேலை செய்யமாட்டார். ஏன் செய்யனும்? மேல் பார்வை பார்ப்பார். தப்புத் திருத்துவார். சத்தம் போடுவார். கோபத்தில், கல்யாணமான தன் பையன்களைச் சில சமயங்களில் கைமிஞ்ச அஞ்சமாட்டார். பட்டறையி லேயே ஒரு ஒரமாக ஒரு குட்டி விமானத்தில் எழுந்தருளப் பண்ணியிருக்கும் பெருமாளுக்குப் பூஜை செய்வார். சின்ன விக்ரகங்கள். அவருடைய தாத்தா நாளிலிருந்து இருக்கிறதாம். இரண்டு பக்கங்களிலும் தேவிகள். சாப்பாடு முடிந்ததும் கொஞ்ச நாழிகை கட்டைக் குரலில் துதிகள் பாடிக் கொண்டிருப்பார். திடீரெனத் தோத்திரங்கள் அடங்கி, குறட்டை பட்டறை யைத் துரக்கும்.