பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t அம்மா இந்தப் பக்கத்தை, அம்மாவைப்பற்றி ஒரு சம்பவத்தில் ஆரம்பிக்கத் தகும். -அப்போ அம்மாதான் குடித் தனத்தைக் கவனித்துக் கொண்டிருந்தாள். சம்பளத்தைக் கொடுத்துவிடுவேன். என் கைச் செலவுக்கே அம்மாதான் தருவாள். நிம்மதி. விட்டதையா பொறுப்பு. கடை கண்ணி, மார்க்கெட், வெளிவேலை, பால் கணக்கு கொடுக்கல் வாங்கல் எந்த ஜோலியும் எனக்கு இல்லை. ஆனால் மாதா மாதம் அம்மா கணக்குப் புத்தகத் துடன் என்னிடம் வருவாள். கைகூப்பி விடுவேன். "அம்மா, எதுவும் எனக்கு வேண்டாம். உன்னிடம் தான் கொடுத்தாச்சே!” "அப்படியில்லேடா, என்னிடம் ஒப்படைச்சிருக்கே. என்ன போச்சு, வந்தது, உனக்கே தெரிய வேண்டாமா? ஆற்றில் போட்டாலும்.” சரிதாம்மா, ஆளை விடு. வேளா வேளைக்கு எனக்கு கலத்தில் சோறு விழறதா, அதோடு நான் சரி. ஒரு பத்து நிமிஷம் முன்னாலே என்னை விரட்டி, அந்த 9-15ஐ நான் பிடிக்கிற மாதிரி பாரேன்-”