பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 & சிந்தாநதி "நான் செய்யற மாதிரியே செய்யணும். ருக்மிணி, குத்து விளக்கை ஏத்து.” விளக்கை ஏற்றுகையில், கிழவிக்குக் கை நடுங்கிற்று. சுடர் குதித்தெழுந்தது, நாங்கள் பையன்கள் பார்த்துக் கொண்டு நின்றோம். - பெரியவர், கற்பூர டப்பாவிலிருந்து கணிசமான ஒரு கட்டியெடுத்து, பெருமாளுக்கு எதிரே வைத்து ஏற்றினார். 'அலமாரியிலிருந்து சத்தியமா, நான் ரூபாய் எடுக் கல்லே!” என்று உரக்கக் கத்திக் கையைப் பட்டென்று தட்டினார். கற்பூரம் அவிந்து விக்ரஹம் பொட்டென விழுந்தது. எடுத்து நிமிர்த்தினார். “உம், பாண்டுரங்கா- ஆகட்டும்!” பட்டெனத் தட்டி, பெருமாள் குப்புறக் கவிழ்ந்ததும், எனக்குப் பயத்தில் அரை நிஜார் நனைந்துவிட்டது. "விஜய ரங்கா! அடுத்தது, பட் பகீர்“ரங்கநாதா !” முடிந்தது. பெரியவர், அங்கேயே இழைப்புளி பெஞ்சில், இடுப்பு வேட்டியை முகம்வரை இழுத்துப் போர்த்திக்கொண்டு காலை நீட்டி விட்டார். "போங்கடா போங்க. இங்கே என்ன வேடிக்கை பார்த்துகிட்டு! இன்னிக்கு இனிமேல் வேலை கிடை யாது.” அன்றிரவு படுக்கும்வரை, ராத்திரி, வீட்டில் எனக்கு இதே பேச்சுத்தான். அம்மா எனக்கு விபூதி இட்டாள். மறுநாள் காலை, பட்டறைக்குக் கிளம்ப, சொக்கா யைத் தலைமேல் மாட்டிக்கொள்கையில் ஜே.பியிலிருந்து