பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 125 ஏதோ பறந்து விழுந்தது. அதைப் பார்த்ததும் எனக்குப் பயமாப்போச்சு. 'அண்ணா! அண்ணா!” அலறினேன். அண்ணா வந்தார். ஒரு நொடியில் புரிந்துகொண்டுவிட்டார். என் கையைப் பிடித்துக் கொண்டார். - "பயப்படாதே. நானும் வரேன்.” பெரியவர் தனியாக இருந்தார். எங்களைக் கண்டதும் எழுந்து நின்று வரவேற்று எதிரே அமரச் சொன்னார். அண்ணா அவரிடம் கையை நீட்டினார். நோட்டைப் பிரித்து, இரு கைகளிலும் பிடித்துக் கொண்டு, வெகுநேரம் அதையே வெறித்துக் கொண் டிருந்தார். பிறகு- "நான் குழந்தையைச் சந்தேகிக் கிறேன்னு நினைக்கிறீங்களா?” "நாயக்கர்வாள், இந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்? நோட்டு கெட்டுப்போனது. உங்கள் குடும்பச் சொந்த விஷயம். அது அகப்பட்டது என் பையன் சொக்காய்ப் பையில். அவரவர் மனசு அவரவரு டையது. உள்ளே புகுந்தா பார்க்க முடியும்? இந்த சந்தேகம் இருக்கே, இது ராமாயண காலத்திலிருந்தே வேலை செய்கிறது." மறுபடியும் மெளனம். அவர் விழிகளிலிருந்து ரெண்டு பெரிய துளிகள் புறப்பட்டு வழிந்து, மோவாயில் உதிர்ந்தன. ‘சாமி, எடுத்ததோடு அல்லாமல் ஒரு குழந்தை பழி ஆவட்டும்னு அதன் மேலே சுமக்கற அளவுக்கு இந்த வீட்டுலே கலி தனியா முத்திப்போச்சு, நஷ்டம் எனக்குப் பெரிசு இல்லே. துரோகம்தான் தாங்க முடியல்லே. சரி, போய் வாங்க.”