பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 சிந்தாநதி அந்தரங்கம் இந்த வியப்பைச் சந்ததி தனக்குள் பங்கிட்டுக்கொள்ள, அதனாலேயே வியப்பு மேலும் மேலும் மேலிட எப்போது, தோன்றிற்று பாஷையெனும் தனி ப்ரகாசம். அதைச் சத்தத்திக்குச் சாசுவதமாக்க எழுத்து: சிந்தனையும் அதன் வெளியீடு பாஷையும் கூடியபின், கேள்வி இன்றியமையாத விளைவு. எங்கிருந்து வந்தேன்? எங்கே போகிறேன்? உயிரே முதலில் நானே ஏன்? கேள்வி இல்லாமல் முடியாது. வாழ்க்கை ஒடிக் கொண்டிருப்பதே- இல்லை- வாழ்க்கையே கேள்வியின் பின்னல் கோலம்தான். கேள்வி உயிரின் சிறப்பு. துடிப்புக்குப் பொருள் காண முயல்வது, கேள்வியெனும் துரண் டலில் மாட்டிக் கொண்டு அந்த துடிப்பின் வேதனையிலிருந்து விடுபட வழி தேடுவது சிந்தனையின் இயல்பு. இந்த வழிக்குப் பிடித்த வெளிச்சம். துணைதான் பாஷை, கதையென்றும், கவிதை யென்றும், காவியமென்றும், தியானம், ஞானம், விஞ்ஞானம், கலையென்றும் அதன் பெயர்களில் விதங்கள் வழிகள் பல பல. கேள்வி தேடல் தவம் தவத்தின் முடிவில் பிறவியின் வயது பூரா வித விதமான வழிகளில் வயதில் முடிவில் இதோ கண் பஞ்சடைப்பில் நினைவு இற்றுப் போமுன் பிறவியின் கடைசித் தரிசனம். 'நீ முடிந்தாய். நான் இருக்கிறேன்!” கேள்வி பதில் சொல்கிறது. இத்தனை வியாபகம், விவரம் நுண்ணிய வேலைப் பாடுகளுடன் கூடிய உயிரின் இயக்கத்துக்குக் காரணமும் அர்த்தமும் தேடுவதில் ஆயுசையே அர்ப்பணித்துக்