பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 & சிந்தாநதி அம்மா பண்ணாத நிர்வாகமா? நாங்கள் குழந்தை களாக இருந்த நாளிலிருந்தே, அப்பாவுக்கு முப்பது ரூபா சம்பளத்தில். அப்படியும் ஒருமுறை அம்மா கணக்குப் புத்தகத் துடன் வந்தாள். அவசரமா ஆபீசுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். எப்படியும் அந்த 9-15ஐ என்னால் பிடிக்க முடியாது. நான் கேட்டபடி அம்மா என்னைத் தயார்ப்படுத்தினாலும் என்றுமே நான் 9-15ஐப் பிடித்ததில்லை. நான் கை கூப்பினேன். -"இல்லை, நீ பார்த்துத்தான் ஆகணும். இந்த மாசம் பெரிய துண்டா விழும்போல இருக்கு. வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் இருக்கும்போல இருக்கு. எனக்கே புரியலை. என் கூட்டல் கழித்தல் சரியா பாரேன்.” "அதுக்கெல்லாம் எனக்கெங்கேம்மா டைம்? எவ்வளவு துண்டு விழறது?” “போன மாசம் அப்பா தெவசம் வந்ததா? அப்புறம் குணசீலம் போனோமா..?” "அம்மா, அதெல்லாம் எனக்கு வேண்டாம். எவ்வளவு குறையறது ?” "ஒரு நூறு ரூபாய்-” "நூறு ரூபாய்!” அதிர்ச்சியில் என் குரல் கோணிக் கொண்டது. முப்பது வருடங்களுக்கு முன்னால் நூறு ரூபாய் எவ்வளவு பெரிய தொகை, புரட்டுவது எத்தனை கடினம் என்று இந்நாளவர்க்கு எங்கே புரியப் போகிறது! ஆத்திரத்தில் அம்மா கையிலிருந்து நோட்டைப் பிடுங்கிக் கொண்டேன். "அம்மா, நீ பொய் சொல்றே-'