பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 & சிந்தாநதி என்னால் எட்ட முடிந்த உயரத்தினின்று என்னைச் சுற்றியும், கீழும் பார்க்கின்றேனே, இந்தக் காட்சி ஒன்றிற்கே பிறவி தகும். காலம் பொய், காயம் பொய், ஆகையால் நாளையும் பொய், ஆனால் வானவில்லின் வர்ணங்களை நினை வினின்று அழிக்க முடியவில்லையே! அதுவும் பொய்யா னாலும், மெய் போலும்மே மெய் போலும்மே. இதுவே பதவி, இதுவே சித்தி. சிந்தனா சக்தியை ஆய ஆய, அதன் எல்லைகள் அசாத்தியம். என் சொல்லின் உருவேற்றத்தால்தான் என் சக்தி, உருவேற TD, 5Tr 翌-assT 2-互女「... நான் மண்டல ஜித் மேகநாதன். அதோ, இல்லை, இதோ மேகங்களின் நடுவே கிடக்கும் என் வானவில்லைக் கிட்டத் தரிசிக்கிறேன். என் ஆச்சரியம், என் பிறவியை வாட்டிய கேள்வியே தான் இப்படி வானவில்லாய்க் கிடக்கிறதோ? உரு ஒருபோலவே தோன்றுகிறது! என் சொல் தந்த வில் அன்றோ! அதன்மேல் காதல், தொண்டை அடைக் கிறது. - காமம் வெறி ஏறுகிறது. சொல்லுங்கள், வார்த்தை களின் நகாசு, கபடுத் திரையை விலக்கிய பின், உண்மை யில் காமத்துக்கும், காதலுக்கும் என்ன வித்தியாசம்? இந்த வில்லும் பெண்ணின் உடல் வளைவுகளை ஒத்திருக் கிறது. ஆசையுடன் வருகிறேன். அனைத்துக்கொள் கிறேன்.