பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ப்ரளயம் சிமார் பதினைந்து வருடங்களுக்கு முன் ஒரு கடிதம். “ப்ரளயம் என்கிற உங்கள் கதையைப் படிக்க வாய்ப் புக் கிடைத்தது, அதன் விளைவாய் என் வாழ்வைப் பெற்றேன். - இந்தப் பக்கம் உங்களுக்கு வர நேர்ந்தால், உங்கள் செளகரியத்தில் என் வீட்டுக்கு வருகை தாருங்கள்.” விஷயம் இதுதான். தற்சமயம் கடிதம் என்னிடம் இல்லை. காப்பாற்றி வைப்பதில் எனக்குச் சிரத்தை போதாது; என் குற்றமே. ஆனால் நான் என்ன, சாகூஜிக் கூண்டிலா நிற்கிறேன்? கடிதத்தில் எழுதியிருந்தபடி, எனக்கு அந்தப் பக்கம் நேமம் இல்லை. நேமம் தனியாக வேண்டுமா என்ன? ஏற்படுத்திக்கொள்ள முடியாதா? கடிதத்தை எழுதி யிருந்த பூடகமே நேமம் ஆகாதா? ஆனால் கடிதம் கிடைத்து இரண்டு வருடங்கள் கழிந்த பின்னர்தான், அதன் அழைப்புக்கிணங்கச் சாத்தியமாயிற்று. சமயம் அப்படித்தான் நேரிடுகிறது. பஸ்ஸிலிருந்து மெயின் ரோடில் இறங்கியபோது, முதிர்ந்த பிற்பகல்.