பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் & 133 -ஆ இந்த இடத்தில் என் கதையைப் படித்திராதவர் களுக்கு- எழுதி மூன்று தலைமுறை காலத்துக்கு மேலா கிறது. கதையின் சுருக்கத்தையேனும் தெரியப்படுத்தும் தேவை ஏற்படுகிறது. s என் கதாநாயகன் வசதியான குடும்பத்தில் முதல் குழந்தையாக உலகத்துக்குக் கண் திறக்கையிலேயே வலது கை, தோளிலிருந்து விரல் நுனிவரை சூம்பிப் பிறக்கிறான். அந்த அதிர்ச்சியிலேயே அவன் தாய், பிரசவத்தை ஒட்டி இறந்துவிடுகிறாள். தகப்பனாரும் அவளைத் தொடர்ந்த பின்னர், பையன் அங்கும் இங்குமாக உறவினரிடம் வளர்ந்து பெரியவன் ஆனதும் சொத்துக்கும் சுயேச்சைக் கும் தனி ராஜாவாகிறான். ஆனால் அவன் மணம் செய்துகொள்ளவில்லை. காரணம்- ஊனத்தால் தாழ்வு மனப்பான்மையோ அல்லது ஆத்ம கர்வமோ? அவன் முனைந்திருந்தால் மணம் புரிந்திருக்கக்கூடிய பெண்ணையும் அவன் பெற்றோர் தங்கள் அந்தஸ்துக்குத் தக்கபடி வேறிடத்தில் கொடுத்துவிட்ட பின், பையனுக்கு உத்யோக ரீதியில் வெளியூர் மாற்றத்தில் தம்பதிகள் ஊரைவிட்டே போய்விட்டனர். அந்தப் பையனும் அவனுக்குப் பழக்கமானவன்தான். அவ்வப்போது அவனிடமிருந்து கடிதம் வரும்- சினேக பாவத்தில், உத்யோகப் பொறுப்பின் கடினங்களையும், கடுமைகளையும், வரவரச் சமாளிக்கக் கஷ்டமாயிருக்கும் பொருளாதார நெருக்கடி பற்றியும். அவன் தன்னைத் தப்பாக நினைக்காத வகையில் இவனும், பணமும் வகையுமாக உதவிகள் அனுப்புவான். கதாநாயகன் ஒரிரவு கனவு காண்கிறான். அவளும் அவனும் ஒரு வாய்க்காலில், ஒரு குறுகிய ஒடத்தில் மிதந்து செல்கின்றனர். கனவில், கை ஊனம் இல்லை. திடகாத்திரனாகவே இருக்கிறான். அவள்மேல் கவி