பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 & சிந்தாநதி நினைவில் தேதிகள் குத்து மதிப்புத்தான். ஒரு வருடம் அப்படி, இப்படி). தயாரிப்புக் காரியாலயம் கோபாலபுரத்தில், ஒரு வாடகை பங்களா. ஆசியாவிலேயே மிகப் பெரிய ஸ்டுடியோ- வாஹினி. இன்னும் எண்ணமாகக் கூடப் பிறப்பெடுக்கவில்லை. கீழே முன் அறையில் ஆபீஸ், பெரிய பின்கட்டில் மெஸ். மாடியில் ஒத்திகை, இசையமைப்பு, இதை பழகல், நடிகர்கள் கோஷ்டியின் வம்பளப்பு, தர்க்கம், கத்தல், பூசல், பூனை இல்லாத சமயத்தில் எலிகளின் கும்மாளம். நான் டைப் பிஸ்ட் மாதச் சம்பளம், சுளை சுளையாக எண்ண இருபத்து ஐந்து ரூபாய்கள். ஸ்தாபனம் எனக்குக் கொடுப்பதைச் சம்பளமாக நினைத்தோ? அல்லது சன்மானமாகவோ ? என்ன பேர் சொல்லி, என்ன கொடுத்தாலும் சரி, என் காலம் அப்போது அப்படி. சினிமா நகடித்ரங்களின் பதவி எப்பவுமே உயரத்தான் என்றாலும், இப்போப்போல் மண்டை கிறுகிறுக்கும் உயரத்தில் அவர்கள் ஆட்சி சென்று கொண்டிருக்க வில்லை. டைரக்டர் காமெராமானுக்குப் பயப்பட் டார்கள். டைரக்டரே முதலாளியாகவும் இருந்தால், அத்து கூடத்தான். இங்கு லேவாதேவிகளில் இன்று போய் நாளை வா மழுப்பல்கள் எல்லாம் கிடையாது. ஏதோ மார்க்கெட் கூடிவிட்டதால் ஏற்படும் மண்டைக் கிறுக்கு, ப்ளாக்மெயிலிங், சண்டித்தனம் எல்லாம் இங்கு வேகாது. பணத்தின் பவர் இவர்களிடம் இருந்தது. அது தரும் பலமும் கூடவே இவர்களிடம் இருந்தது. என் வரை நான் ஆபீஸ் டைபிஸ்ட் என் நேரம் எட்டு மணியிலிருந்து எட்டு மணிவரை. ஞாயிற்றுக்கிழமையும் வந்தாகணும்.