பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 - சிந்தாநதி மாடியில் இசை அமைப்பு நடந்துகொண்டிருக்கிறது. வாசித்ததையே வாசித்துக் கொண்டு, சொன்னதையே சொல்லிக்கொண்டு, ஹார்மோனியத்தின் பற்களைக் குருட்டுத் தடவலில் நெருடிக்கொண்டு- இடையிடையே வாத்தியக்காரர்களுக்குள் சண்டை. 'உன் சுருதியை சரியாக் கூட்டுடா ! இன்னும் சுருதி கூட்டத் தெரியலே! என்னைக் குத்தம் சொல்ல வந்துட்டான். தானும் ஒரு வாத்தியம்னு வாசிக்க வந்துட்டான்!” ஒரு சமயம் இரு சமயம் கைகூடக் கலந்திருக்கிறது. 寅 ★ ★ காஞ்சனமாலா அபூர்வமாக விஜயம். பெயரிலேயே காந்தமும் கவிதையும் சொரிந்தன. நேரிலும் பிரமிக்கத் தக்க அழகு. புன்னகையில் காந் தம், இன்னும் அடிக்கடி வரமாட்டாளா? இவளுக்குக் கதாநாயகி பாத்திரம் ஆதலால் ஒத்திகை தேவையில் 65) GÜli jfr ? х ★ ★ ஒரு நாள் சாஹிப் வெளியிலிருந்து வந்து ஸாரங்கி வாசித்தார். இசைக் குழுவில் ஒரு ஆந்திரா ப்ரதர்' தபேலா வாசித்தான். சாஸ்த்ரீய சங்கீதம். ஒரு கட்டத்தில் இருவரும் வாத்தியங்களின் மேல் பட்டுத் துணி போட்டு வாசித்தனர். லாரங்கியோ எலும்பு உருக்கியோ! இன்னும் நினைவை விட்டு அகலா அனுபவம். 冀 * ★ மேல் தடத்திலிருந்து காப்பிப் பையன்வரை இங்கு எல்லோரும் ப்ரதர்'களே! அவர்கள் போட்டுக்