பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா.ச.ராமாமிருதம் 143 கொள்ளும் ப்ரதர்களின் Brotherhood ofman இங்கேதான் தோன்றிற்றோ எனத் தோன்றும். ஆனால் அப்படி எண்ணினால், எண்ணுபவர் ஏமாந்தவர். ★ ★ ★ ஐந்தடி முழுக்க இருப்பாரா? எனக்குச் சந்தேகம். காமேரா மேதையென அப்பவே படவுலகில் மிகப் பிரசித்தி ஏற்கெனவே பெரிய விழிகள். கனத்த கூழாங்கற் கண்ணாடி பின் அசாதாரணப் பெரிதில் தோன்றின. சற்று உள் அடக்க மறுத்த மேல் பல் வரிசை. அரைக் கைச் சட்டை. தரையில் புரளப் புரளக் கட்டிய வேட்டி. மேஜை விளிம்பில் முழங்கால்களை முட்டுக் கொடுத்து, நாற்காலிக் கைகள்மேல் முழங்கைகளை ஊன்றி இரண்டு கை விரல் நுனிகளும் மோவாயடியில் தொட்டுக் கொண்டு மணிக் கணக்கில் உட்கார்ந்திருப்பார். அவரைச் சுற்றி ப்ரதர்கள் அடிக்கும் அரட்டை, அரட்டையைச் சூழ்ந்த சிகரெட் புகை மண்டலம், நடுவே மோன அரணுள் மனிதன் பத்திரமாக இருந்தான். ஏதோ தவநிலையில் இருப்பதுபோல எனக்குத் தோன்றும். என்ன தவம்? ஆனால் அந்த முகமே ஒரு முகமூடி. பிரம்மச்சாரி. ஒருநாள் காலை. ஆபீஸில் நாங்கள் இருவர் மட்டுமே. Picture Discussion என்கிற பேரில் அரட்டைக் கச்சேரி கூட இன்னும் சற்றுநேரம் இருந்தது. தன்னைக் கலைத்துக் கொண்டு-என்னை நோக்கியா? ஆம், என்னையேதான்நடையில் லேசான விந்தல். வந்து எதிரே நாற்காலியில் உட்கார்ந்தார். இதுவரை அவர் என்னோடு பேசிய தில்லை. என்னைக் கண்ணெடுத்துப் பார்த்ததில்லை. எனக்கு எப்படி இருக்கும்? "ஏம்பா.யில் கதை எழுதினது நீதானா? இல்லை, வேறே ராமாமிருதமா?” எனக்கு இன்னும் எப்படியிருக்