பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 நாணயத்தின் இரு பக்கங்கள் சிென் சித்தப்பா திருமணத்துக்கு என் பெரியப்பா (அம்மாவுக்கு அக்கா புருஷன்) காரைக்குடியிலிருந்து வந்தார். அங்கே அவர் போஸ்ட் மாஸ்டர். வாட்ட சாட்டமான கம்பீர புருஷன். கட்டுக் குடுமியில் ஆங் காங்கே நரையின்மின், லேசாக வளைந்து நுனி கூரிட்ட மூக்கின்கீழ் செதுக்கிய வாயும், மோவாயும். இந்த ஜாடை விசேஷங்களும், துக்கத்திலும் மாறாத பஞ்சகச்சமும், அமைதியான குரலும் நினைவில் நிற்கின்றன. ஜட்காவை விட்டு அவர் இறங்கியதும் அவர் மூட் டையை வாங்கிக் கொண்டவன் நான்தான். ஒரு சின்னப் பெட்டி, ஒரு பெரிய கூஜா. அவரை முன்னால் பார்த்த ஞாபகம் இல்லை. ஆனால் கலியாணத்துக்கு வருபவர் யாராயிருந்தால் என்ன? "அம்மாப் பெண் பிள்ளையா நீ? அப்படியே உரிச்சு வெச்சிருக்கே?' அவர் அம்மாப் பெண்ணைத்தான் தேடினார். நமஸ்காரங்கள், குசலங்கள் ஆனபின், "என்ன அத்திம்பேரே உடம்பு?" என்று அம்மா கேட்டதும், அவர் கண்களில் ஒரு மிரட்சி புகுந்தது. "ஏன், அப்படி ஏதேனும் தெரியறதா?” சி ந - 10