பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 & சிந்தாநதி ஒரு வெள்ளி ரூபாய். இந்நாள் ரூபாய் அல்ல. கனமாக வெள்ளிப் பங்கு நிறைய. முதன் முதலாக எனக்கே ஒரு முழு ஒரு ரூபாய். செலவழிக்க மனம் வரவில்லை. இரண்டு நாட்களுக் குக் கையில் வைத்துக்கொண்டு தடவிப் பார்த்து, அழகை அனுபவித்துவிட்டு, அம்மாவிடம் கொடுத்துவிட்டேன். இது நடந்து வருடங்கள் நாலு ஒடிவிட்டன. ஷார்ட் ஹாண்டு, டைப்பிங் பயின்றுகொண்டே வேலைக்கு அலைகிறேன். என் தகப்பனாருக்கு சொற்ப சம்பளத்தில், காஞ்சிபுரத்துக்கருகே ஒரு கிராமத்தில் பள்ளிக்கூட வாத்தியார் வேலையில் என் பெற்றோர்கள், என் பின் பிறப்புகளுடன் காலம் கடத்துகிறார்கள். இங்கே நான் சித்தப்பா வீட்டில் தஞ்சம். எனக்கு முக கூடிவரம் ஆகிவிட்டது. மூஞ்சி முற்றிக் கொண்டே வருகிறது. பருக்கள். எனக்கே என்னை ஆக வில்லை. உலகம் இவ்வளவு பெரிய சிறையா? கையில் கால ணாக் காசு கிடையாது. ஆனால் ஓயாத பசி பழையதைப் பிழிந்து வைத்துக்கொண்டு சாப்பிடு என்றால், மூணு வேளையும் சோறுதானா? இது என்ன தண்டனை? நடக்கிறேன். நடந்துகொண்டே யிருக்கிறேன். வேலைக் காக நடக்கிறேன். என்னிடமிருந்து தப்பித்துக் கொள்ள நடக்கிறேன். oh god! இதற்காகவா என்னைப் படைத் தாய் நியாயம் கேட்க அவனைத் தேடி நடக்கிறேன். வயிற்றைக் கிள்ளும் பசியை மறக்க நடக்கிறேன். எங்கு வந்திருக்கிறேன்? இது State Bank கட்டடம் அல்லவா? Reserve Bank அண்ணா இங்கேதான் இருக் கிறார் இல்லையோ? அந்நாள் Reserve Bank, அதே கட்டடத்தில்தான் இயங்கிற்று. படியேறிப் போனேன்.