பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 சிந்தாநதி பேசிக் கொண்டிருந்தவர், நான் தலைமறைவாக முயல்வது கண்டு, நேரே என்னிடம் வந்து என் தோள் மேல் கை போட்டுக் கொண்டு, நாங்கள் இருவர் மட்டுமே தனித்த மூலையில், விரலைச் சுண்டிக் காட்டிப் புன்னகை புரிந்தார். "கொடுத்துடறேன். இன்னும் கிடைக்கல்லே." "ஒரு வாரத்துலேயே சொன்னே..! உன் படிப்புக்குத் தானே வாங்கினே! சித்தப்பாவிடம் கேட்டு வாங்கித் தந்துட வேண்டியதுதானே ! உன் சித்தப்பாவுக்குத் @grfius'3up/r? No? I thought so." கொஞ்ச நேரத் தயக்கம். "அப்போ நீ கேட்ட காரியத்துக்குச் செலவு ஆகல்லே. No? Í Thought so." மீண்டும் தயக்கம், "ஒண்னு சொல்றேன். கடனாக வாங்கினதை சொன்னபடி திருப்பிக் கொடுத்துடனும். அதுதான் கெளரவம், மானம். இல்லாட்டா, அப்புறம் புத்தி என்னென்னவோ மாதிரி போயிடும். நீ வளர்ற பையன் பாரு! வர வாரம் கொடுத்துடுறியா? கொடுத்துடு.” வர வாரமாவது: எத்தனையோ வாரங்கள். என்னைப் பார்க்கும் போதெல்லாம், புன்னகை புரிந்து, எனக்கு மட்டும் தெரிய விரலைச் சுண்டுவார். நான் அசடு வழி வேன். சித்தப்பாவிடம் எப்போ சொல்லி விடுவாரோ? பகீர் பகீர் அந்நாள் பையனை, இந்நாள் கண்களுடன் பார்க்கக் கூடாது. பெரியவர்களுக்கும், நியாயத்துக்கும் பயந்த நாள். அதுவும் குற்றம் செய்த நெஞ்சு.