பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 161 சிந்திக்காமல் இருக்க முடியவில்லை- ராமகாதையே திசை திரும்பியிருக்கும். - அல்லவா ? குளம்போசை என்னுள் கேட்கிறது. உயிர்துள்ளுகிறது. Heart attack? ஹிந்தோளம், மால்கோஷ், மால் கவுன்ஸ், சந்த்ர ஹான்ஸ், ஸாரமதி- என்று கட்டான்களைக் காட்டி உதறும் ஒரே கோலத்தைக் கேட்டுக் கேட்டுச் செவி பொளிந்து விட்டது. ஆனால் நீ ராக ரத்ன மாலிகா. My immortal wounds argår g-esquot பிதற்றல், பேத்தல்-இத்தனையும் ஜன்னி, அப்படித் தானே ! ஜன்னியில்லாமல், காவியங்கள் உண்டாகியிருக்க (lpiq-il issoil. லலிதா ஸஹஸ்ர நாமம், லெளந்தர்யலகரி, சியாமளா தண்டகம், மேக சந்தேசம், அபிராமி அந்தாதி, பராபரக் கண்ணி, பத்ரகிரிப் புலம்பல்- அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே! அன்பினில் விளைந்த ஆரமுதே! தேவி! என் பாவி! Mysticism- காதலின் மஹோன்னத தத்துவத்தில் காதற் பொருள்- அது மானாயிருந்தாலென்ன, மனிதையா யிருந்தால் என்ன? My dark Gazelle of the Night! சிந்தா நதியில் தட்டிய நிழல்கள்.