பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பத்துரரில் நான் குடித்தனமான புதுசு, அந்தப் பையன் எனக்கு அறிமுகமானான். என் பிள்ளையைப் பார்க்க வருவான். அம்பத்துார் தொழிற்பேட்டை 1.1.1.யில் படித்துக் கொண்டிருந்தான். நாக்கு துணிக்கூர் லேசாக மழுங்கினாற்போல் உச்சரிப்பில் லேசான கொச்சை. அங்கும் இங்குமாகத் தெளித்த தெலுங்கு வார்த்தைகள். நேணு தெலுகு நாயுடு பாபு!” எனக்கு அவனை மிகவும் பிடித்தது. அவன் மேல் சிறகணைப்பைத் துாண்டிற்று. உத்யோகத்தினின்று ஒய்வு பெற்ற பின், சிறகு, நிழலோ அடக்கமோ தருமளவுக்கு நீளமும் அகலமுமாயிருக்க முடியாது. கேட்கப் போனால் ஜடாயு சிறகுகள்தாம். ஆயினும், மறைந்திருக்கும் தாய்மை உணர்வைத் துரண்டினான் என்றே சொல்ல வந்தேன். மரியாதை உள்ள பையன், எப்போது வந்தாலும் வாசலிலேயே என் பிள்ளையுடன் பேசிவிட்டு எந்நேர மானாலும் உள்ளே வந்து என்னைப் பார்க்காமல் போக மாட்டான். 'ஒக்கஸாரி அம்மகாரும் மீரும் மன இன்டிக்கு ரா ஒத்ஸனு.” அடிக்கடி அழைப்பான். துங்கு, இளநீர், மஞ்சி ஆவு பாலு சாப்பிடலாம். வீட்டிலே மாடு இருக்கு!" என்று ஆசை காட்டுவான். இன்னும் போகப் போகிறேன்.