பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா, ச. ராமாமிருதம் : 163) "ஆ நாளுலோ கவனங்கா சதவே லேது. அதனாலே இப்புடு I.T.." என்று விரக்தியோடு சொல்கையில் எனக்கு வயிற்றை என்னவோ பண்ணிற்று, "அப்பா க்ருஷி நேனே ஒரே ஆண் பிள்ளை. நாலு சிஸ்டர் இருக்காங்க யாருக் கும் கலியாணம் ஆவல்லே. ஏமோ கொஞ்சம் பூஸ்திதி உன்னதி, ஆனால் அப்பாவால் நேரா விவசாயம் பண்ண முடியல்லே, ஏர் பிடிச்சு எத்தனையோ வர்சமாயிந்தி.” "ஏன், வயசாயிடுத்தா?” "இல்லேங்க; TB. இந்த ஒரு வருஷமா படுத்த படுக்கை யாயிட்டாரு இனி தேறமாட்டாரு, எல்லாருக்கும் தெரியும், எல்லாருக்கு முன்னாலே அவருக்குத் தெரியும். அவருக்கு முட்டைக்காக ரெண்டு கோழி வளர்க்கிறோம். ஆனால் சத்து எங்கே பிறக்குது? மருந்து மாயம் எல்லாம் பார்த்தாச்சு. அம்மா கழுத்துலே மஞ்சக்கயிறுதான் பாக்கி. “தாம்பரம் ஸானடோரியமுலோ இருக்கலாம். ஆனால் அவரு இஷ்டப்படல்லே. எங்களுக்கும் இஷ்ட மில்லே. அவரைப் பிரிஞ்சு இருக்க முடியாது. இப்பவே அவரைப் பிரிஞ்சு ஒவ்வொரு நாளும் எத்தினி நேரம் இருக்கேன் தெரியுமா? Redhills பக்காலோ ஒக்க கிராம முலோ வாஸ்மண்டி சொந்த இல்லு. உதயானிகி, 4.30 மணிக்கே எழுந்து சமையல் செய்தோ, பழையதோஅம்மா எதைக் காட்டிக் கொடுக்குதோ! ரோட்டுக்கு ஒரு மைல் நடக்கணும், 6 மணிக்கு ஒரு ப்ரைவேட் பஸ். தவறிப் போச்சு, அடுத்தது 7.30 நிச்சயமில்லை. அன்னிக்கு I.T.!.க்கு வந்தாப்பிலேதான். அதேமாதிரிகா திரும்பற போதும் வீடு சேர ராத்திரி, 8, 8-30 ஆயிடும். அப்பாவை என்ன கவனிப்பேன் செப்பண்டி? உள்ளே நுழையறப் பவே தேவராஜ்! நாலு நாளா அதுகூட கேக்கல்லே!” முகத்தைத் திரும்பிக் கொண்டான்.